கைக்குழந்தையுடன் கடமையாற்றும் போக்குவரத்து போலீஸ்

பெண்களின் அளப்பறிய சக்தியும் கடமை உணர்ச்சியும் எப்போதும் பாராட்டப்படுவது. அதிலும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதியன்று இந்த செய்தி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையுடன், கொளுத்தும் வெயிலில் நின்றபடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பாலின பாகுபாடு, பாலின சமத்துவம், சம உரிமை என ஆணுக்கு இருக்கும் உரிமைகள் பெண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புகள் திவிரமாக இருக்கின்றன.

அதற்கான ஒரு குறியீடாகவே சர்வதேச மகளிர் தினமாக மார்ச் 8ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆனால், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பையும், பொறுப்பையும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளும் சம்பவங்களுக்கு ஒரு உதாரணமாக இந்த வீடியோ பார்க்கப்படுகிறது.

இந்த இணையத்தில் வைரலாகிய உடனேயே, சண்டிகரின் டிஜிபி சஞ்சய் பனிவால் ட்விட்டரில் பதிலளித்தார், குழந்தை பிறந்த பிறகு மகப்பேறு விடுப்பில் இருந்து திரும்பிவிட்டதாகவும், அந்த பெண்ணுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு என்ற தெரிவு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த பெண் போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிளுக்கும் இது தெரியும் என்றாலும், அவரது கடமை உணர்வும், தாய்மை உணர்வும் கலந்து இந்த வீடியோவில் வெளிப்படுவதாகவே அனைவரும் கருதுகின்றனர்.

இந்த வீடியோவில் காணப்படும் பிரியங்கா என்ற கான்ஸ்டபிள், சண்டிகரில் பணியாற்றுகிறார். உள்ளூர்வாசி ஒருவரால் படமாக்கப்பட்டு பின்னர் ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினையைப் பெற்று வருகிறது. பெண் கான்ஸ்டபிளின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்காக பலர் அவரை பாராட்டினாலும், சிலர் தனது குழந்தையை வீட்டிலேயே வைத்திருக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.

சில நெட்டிசன்கள், பிரியங்கா போன்ற உழைக்கும் தாய்மார்களுக்கு கிடைக்கக்கூடிய மோசமான உள்கட்டமைப்பை விமர்சித்தனர். பெண்கள், குடும்பத்திற்கும், பணிக்கும் இடையே தங்கள் வாழ்வை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று வேதனையும் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here