ஒவ்வொரு பெண்ணும் கைத்தொழில் கற்றுக்கொள்ள வேண்டும்

 

ஈப்போ-

ஒவ்வொரு பெண்ணும் கைத்தொழில் ஒன்றைக் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் வழி தன் குடும்பத்திற்கு உதவியாக அவர்கள் செயல்பட முடியும் என்று பேராக் மாநில மகளிர் மேம்பாட்டு இலாகா இயக்குநர் கௌரம்மா தெரிவித்தார்.

இந்தக் கைத்தொழில்கள் பல இயக்கங்கள் வழி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.

அதனை நமது பெண்கள் அதிகமானோர் கற்றுக்கொண்டும் வருகின்றனர்.

இங்கு கற்றுக்கொள்ளும் கைத்தொழிலைப் பெண்கள் தொடர்ந்து செய்திட வேண்டும். அதன் வழி கிடைக்கும் வருமானத்தைக் குடும்பச் செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நம் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. எந்த நிலைமையிலும் மாறலாம். அந்தத் தருணத்தில் இதுபோன்ற கைத்தொழில்கள்தாம் நமக்குக் கைகொடுக்கும் என்று பேராக் மாநில இந்து சங்கம் பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய கைத்தொழிலும் அதன் பலனும் எனும் தலைப்பிலான மகளிர் கலந்துரையாடலின்போது கௌரவம்மா இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முப்பது பெண்கள் தங்களது திறமையில் உருவான பல்வேறு வகையிலான கைவினைப்பொருட்களை விற்பனைக்கு வைத்தனர் என்று பேராக் இந்து சங்கத் சமூக நலப் பிரிவின் தலைவி எஸ்.பத்மாதேவி தெரிவித்தார்.

அதிகமானோர் வந்து வாங்கிச் சென்றனர். இதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் மகிழ்சி அடைந்தனர் என்றார் பத்மாதேவி.
இந்த நிகழ்ச்சியில் பேராக் மாநில இந்து சங்கத் தலைவர் பொன். சந்திரனும் கலந்துகொண்டார்.

-லெட்சுமி ராஜூ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here