ஜோகூரில் காதல் மோசடியில் சிக்கி 57 வயது பெண் ஒருவர் RM84,600 இழந்தார்

காதல் மோசடியில் சிக்கிய 57 வயது பெண் ஒருவர் 84,600 ரிங்கிட்டை இழந்துள்ளார்

பாதிக்கப்பட்ட பெண் இந்த ஆண்டு பிப்ரவரியில் அஹ்மட் ஆடாம் என்ற நபருடன் பேஸ்புக்கில் நட்பாக இருந்துள்ளார். குறித்த “சந்தேக நபர் தான் இப்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிப்பதாகக் கூறினார்,” என்று, குறித்த பெண் புகாரளித்ததாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் முஹமட் சொஹைமி இஷாக் கூறினார்.

பாதிக்கப்பட்டவரும் சந்தேகநபரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாகவும், சந்தேக நபர் மலேசியா திரும்புவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும், அத்தோடு பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அஹ்மட் உறுதியளித்தார்” என்றும் அவர் கூறினார்.

பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுங்கத் திணைக்கள அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அஹ்மட் ஒரு பெரிய அளவு ஸ்டெர்லிங்கை பவுண்டு எடுத்துச் சென்றதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரை விடுவிப்பதற்காக பணம் செலுத்த வேண்டும் என்றும் குறித்த பெண் பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்தார்” என்று அவர் மேலும் கூறினார்.

எனவே பாதிக்கப்பட்ட பெண் ஒரு வங்கிக் கணக்கில் எட்டு பரிவர்த்தனைகளைச் செய்ததாகவும், இதனை தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறியபோது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here