கொலைவெறி தாக்குதல்: கணுக்கால், தோள்பட்டை, கழுத்தில் பலத்த காயம்

நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் இருப்பதாக மம்தா வேதனை!!

நந்திகிராம்:
தேர்தல் பரப்புரையின்போது அடையாளம் தெரியாத நபர்களால் கீழே தள்ளிவிடப்பட்டதால் காயமடைந்த மம்தா பானர்ஜி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகிய அமைச்சர் சுவேந்து அதிகாரி பாஜவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் பாஜ கட்சிக்கு தாவி வருகின்றனர். இதனால், சுவேந்துக்கு பதிலடி தரும் வகையில் அவர் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

நேற்றுk காலை அவர் நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மாலையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள வந்தார். அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்த போது, அவரை 4, 5 குண்டர்கள் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கிக் கொண்டு காரில் ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த மம்தா, ‘‘கார் கதவு அருகே நான் நின்றிருந்தேன். அப்போது, 4, 5 பேர் என்னை தள்ளிவிட்டு தாக்கினர். என்னை சூழ்ந்து கொண்டு கார் கதவு நோக்கி தள்ளிவிட்டனர். கதவில் எனது கால் மோதியது. இதில் காலில் காயம் ஏற்பட்டது,’’ என்றார்.

மேலும் தாக்குதல் நடந்த சமயத்தில் அருகே காவலர்கள் யாரும் இல்லை என்றும், இது ஒரு சதித் செயல் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மம்தாவின் இடது கணுக்கால், வலது தோள்பட்டை, கை மற்றும் கழுத்தில் கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

முதலமைச்சருக்கு சிகிச்சையளிக்க 5 பேர் கொண்ட மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவை மேற்கு வங்க அரசு நியமித்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு நெஞ்சுவலி, மூச்சு திணறலில் தாம் அவதிப்படுவதாக தெரிவித்ததை அடுத்து மம்தாவின் உடல்நிலை 48 மணி நேரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே மமதா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்புமாறு தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

ஆளுநரின் உத்தரவு

இதற்கிடையில் மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் மம்தாவிடம் தொலைப்பேசியில் இதுகுறித்து விசாரித்தாக தெரிவித்துள்ளார்.

‘மம்தாவைத் தொலைப்பேசியில் அழைத்து பேசினேன். இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர், பாதுகாப்பு இயக்குநரிடம் தகவல் கேட்டுள்ளேன். சுகாதாரத்துறை செயலர், மருத்துவமனை நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது,’ என ஆளுநர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here