மக்கள் நலன் பேணும் அமைச்சரின் சாதனைகள்

 

மலேசிய மனிதவள அமைச்சராகப் பதவியேற்ற 365 நாட்களில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் 6 அம்சங்களில் வெற்றி அடைவுநிலையைப் பதிவுசெய்திருக்கிறார்.

மக்கள் நலன் பேணும் மனிதவள அமைச்சு என்ற சுலோகம் வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி ஆத்மார்த்தமாக அமைச்சரின் செயலாக்கங்கள் அமைந்திருக்கின்றன.

தேசிய மனிதவள திட்டத்தில் 6 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 1. திறன் மேம்பாடு, 2. வேலை வாய்ப்பு, 3. தொழிலாளர் நலத்திட்டங்கள், 4. தொழில் உறவுகளைச் சீர்படுத்தி மேம்படுத்துதல், 5. பணியிட சுகாதாரப் பாதுகாப்பு, 6. சமூகப் பாதுகாப்பு நிர்வாகம். இந்த அம்சங்களும் தொழிலாளர் சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான பலன்களைக் கொண்டுவந்துள்ளன.

மனிதவள அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள், இலாகாக்கள் கூட்டு முன்னெடுப்புகளில் இந்த வெற்றியை உறுதிடசெய்திருக்கின்றன.

கோவிட்-19 பெருந்தொற்று நாட்டின் பொருளாதாரத் துறையின் ஆணிவேரையே அசைத்தை்துப் பார்த்து பல்லாயிரக்கணக்கானோர் வேலைகளையும் வருமானத்தையும் இழப்பதற்குக் காரணமாக இருந்த காலகட்டத்தில் மனிதவள அமைச்சு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் வழி தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்வாதாரத்தைத் தற்காத்தது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 1990 தொழிலாளர் தரமான, குறைந்தபட்ங் வீடமைப்பு, தங்குமிட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் சட்டத்தை (திருத்தம் 2020) (சட்டம் 446) அனைத்து தொழில்துறைகளுக்கும் விரிவுபடுத்தியதுதான்.

நெருக்கடிமிக்க தொழிலாளர் தங்குமிடங்கள் கோவிட்-19 தொற்று பரவலுக்குப் பெருங்காரணியாக இருப்பதை உணர்ந்து 1990 தொழிலாளர் தரமான, குறைந்தபட்ச, வீடமைப்பு, தங்குமிட வங்தி மற்றும் அடிப்படை வசதிகள் சட்டம் (திருத்தம் 2021) அவசரகால விதி 2021, பிப்ரவரி 26ஆம் தேதி அரசாங்கப் பதிவேட்டில் (கெஸட்) பதிவு செய்யப்பட்டது.

தொழிலாளர் தங்குமிட வசதிகளைக் கண்காணித்து நிர்வகிப்பதற்கு இப்புதிய விதி வழி வகுக்கிறது. விதிமுறைகளை மீறும் முதலாளிமார்களுக்கு மிகக் கடுமையான தண்டனையையும் இந்த விதி உறுதிசெய்கிறது.

இவை அனைத்தும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன் காக்கவும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதிசெய்யவும் அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் சிந்தனையில் உருவெடுத்து உயிர்பெற்றிருக்கும் சட்டவிதிமுறைகளாகும்.

அதேசமயத்தில் வேலை இழப்புகளையும் வருமானப் பாதிப்புகளையும் சரிசெய்து ஈடுகட்டுவதற்கு பெஞ்ஜானா எச்ஆர்டிஎஃப் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மனிதவள அமைச்சு மேற்கொண்டது.

அதன் வேலை வாய்ப்புடன்கூடிய பயிற்சித் திட்டங்களில் 18,131 பேர் பங்கேற்ற நிலையில் அதற்காக 9 கோடியே 53 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.

ஏழ்மை மற்றும் வறிய ஏழ்மைப் பிரிவைச் சேர்ந்த பி40 மக்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் 22,851 பேர் பங்கேற்க, 13 கோடியே 11 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டது.

கெராக் இன்சன் கெமிலாங் திட்டத்தில் 26,273 பேர் பங்கேற்றனர். இதற்காக மனிதவள அமைச்சு ஒதுக்கிய நிதி 14 கோடியே 99 லட்ங்த்து 20 ஆயிரம் வெள்ளி ஆகும்.

தொழில்புரட்சி 4.0 திட்டத்தின் கீழ் 7,958 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக 4 கோடியே 83 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டது.

சிறுதொழில், நடுத்தர வணிகர்கள் மேம்பாட்டுத் திட்டங்களில் 10,314உதவி நிதி 5 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி ஆகும்.
அதே சமயத்தில் பெர்கேசோவின் சம்பள மானிய உதவித் திட்டத்தையும் – பிஎஸ்யூ (கித்தா பிரிஹத்தின்) அமல்படுத்தி முதலாளிமார்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிம்மதி உயிர்மூச்சு தந்தது மனிதவள அமைச்சு.

பிஎஸ்யூ 1.0 (2020, செப்டம்பர் 30 வரை) 331,569 நிறுவனங்கள் – அவற்றில் பணிபுரியும் 27 லட்சத்து 25 ஆயிரத்து 161 தொழிலாளர்கள் நன்மை பெறும் வகையில் 12.38 பில்லியன் வெள்ளி வழங்கப்பட்டிருக்கிறது.

பிஎஸ்யூ 2.0 (2020 டிங்ம்பர் 31 வரை) திட்டத்தில் 77,883 நிறுவனங்கள் – 9 லட்சத்து 73 ஆயிரத்து 415 தொழிலாளர்களுக்கு 44 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி சம்பள மானிய உதவித்தொகை வழங்கப்பட்டது.

பிஎஸ்யூ 3.0 (2021 பிப்ரவரி 12 வரை) 68,163 நிறுவனங்களைச் சேர்ந்த 6 லட்சத்து 92 ஆயிரத்து 355 தொழிலாளர் நலன்களுக்கு 12 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் மைஃபியூச்சர் வேலை வாய்ப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டதில் 682,769 வேலை வாய்ப்புகள் முன்வைக்கப்பட்டன. வேலை தேடுபவர்கள் 468,645 பேரில் 160,554 பேர் வாய்ப்புகளைப் பெற்றனர்.

தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யாமல் அவர்களைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு 21 கோடியே 21 லட்சம் வெள்ளியை மனிதவள அமைச்சு வழங்கியிருக்கிறது. 441,567 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட 45,864 விண்ணப்பங்களை அமைச்சு பெற்றிருக்கிறது.

இத்திட்டங்களின் வெற்றிக்கு மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் பெர்கேசோ, எச்ஆர்டிஎஃப் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.

365 நாட்களில் இவ்வளவு சாதனைகளைப் பதிவுசெய்து நாட்டின் மேம்பாட்டு ஆணிவேராக விளங்கும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைக் காத்திருக்கிறார் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன்.

– பி.ஆர். ராஜன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here