இப்பொழுது தான் நிம்மதியாக உணர்கிறேன்

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற

தமிழக வீராங்கனை பவானி!

டோக்கியோ ஒலிம்பிக்கின் வாள் வீச்சு போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி தகுதி பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்க வாள் வீச்சில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தகுதி பெற்று புதுசாதனைப் படைத்துள்ளார்.

உலக தரவரிசையின் அடிப்படையில் ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், உலக தரவரிசையில் 45வது இடத்தில் உள்ள 27 வயது பவானி தேவி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்.

சென்னையின் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பவானி தேவி, சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்களை வென்று முத்திரை பதித்தவர். கடந்த 2019 இல் பெல்ஜியம், ஐஸ்லாந்தில் நடந்த உலக கோப்பை வாள் வீச்சு போட்டியில் வெள்ளி,  வெண்கலப்பதக்கங்களைக் கைப்பற்றினார். தற்போது ஹங்கேரியில் நடக்கும் வாள் வீச்சு உலக கோப்பையில் கொரிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதனால் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். அடுத்த மாதம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தரவரிசை மூலம் பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியானது முறைப்படி அறிவிக்கப்படும். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் வாள் வீச்சு பிரிவில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பவானி பெற்றுள்ளார். ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்ட் நகரில் பவானி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து பவானி தேவி கூறுகையில்,”நாங்கள் ஒரு ஹாலில் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது எனக்கு நானே இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் மேலும் ஒரு தகுதிச்சுற்றில் நிரூபித்துக்காட்ட வேண்டிய சூழல் உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here