நல்லது சொன்னா கேட்டுக்கணும் !

-பெஞ்ச் பெரியசாமி இன்னைக்கு என்ன சொல்லப்போறாரு?.

பத்து வருஷத்திற்கு முன்னால சாலை போக்கு வரத்துத்துறை ஒரு சட்டம் கொண்டுவந்தாங்க. அதாவது கார்ல பயணம் போகும்போது பின்னால் அமர்ந்து போறவங்களும் பாதுகாப்பு பட்டை அணியனும்முனு வலியுறுத்தினாங்க.  அப்படிச்சொல்லியே பத்து வருஷமாச்சு. இன்னும் அது நடைமுறையிலே இல்லே! அத கண்டும் காணாம இருக்காங்க.

அரசாங்கம் பல விஷயங்கள்லே இப்படித்தான் மெத்தனனமா இருக்கு. ஒன்னு உதாரணம் சொன்னாதேவலாம். இன்னும் ஞாபகத்திலே இருக்கு. அதாவது 2 உந்து சக்தி மோட்டார் சைக்கிள் சுகாதார, சுற்றுச்சுழலுக்கு ஏற்றது இல்லே, அதிலிருந்து வர் அதிகமான புகை நல்லதில்லே,  அதனால, அந்த தயாரிப்புகள் கட்டம் கட்டமா குறையும். அதுக்கு பதிலா 4 உந்து சக்தி மோட்டார் சைக்கிள்கள்தான் புழக்கத்தில் இருக்கும்னு சொல்லியே 20 வருஷத்துக்கு மேலாச்சு.அந்த பேச்சு காத்திலே போச்சு.

இப்படித்தான். சொல்ற பல சங்கதிங்க காத்திலே போயிடுது. அப்புறம் மறந்தே போயிடுது.

கார்லே போறவங்க பாதுகாப்புக்கு பாதுகாப்பு பட்டை அவசியம்ங்கிறது எல்லாத்துக்கும் தெரியும். ஓட்டுநர் பக்கத்திலே இருக்கிறவங்க கூட இப்போ பாதுகாப்பு பட்டை போட்டுக்கிறதில்லேங்கிறதுதான் பெரிய வருத்தம்.

கார்ல உட்கார்ந்ததும் பாதுகாப்பு பட்டை போடணும்ங்கிற எண்ணம் இயல்பாகவே வந்துடணும். அது பழக்கமா மாறணும்ங்கிறாரு சாலை பாதுகாப்பு ஆய்வுத்துறை ( மிரோஸ் ) தலைவர் டத்தோ சூரட் சிங்.

எப்போதுமே நல்ல விஷ்யம்னா கொஞ்சம் லேட்டா தான் புரியும். குறிப்பா நம்ம இளசுங்க தலையிலே போடுற தலைகவசத்த போடாம மோட்டார் சைக்கிள் ஓட்டறது இப்போ அதிகமாயிடுச்சு. இதையும் கவனிக்கணும்.

ரொம்ப பேரு பாதுகாப்புங்கிறது அரசாங்கத்துகிட்டேதான் இருக்கிறதா நினைக்கறாங்க. அது நம்ம கிட்டேதான் முதல்லே இருக்கிற சமாச்சாரங்கிறது மறந்தே போயிடுது. 

நாம் பாதுகாப்பா இல்லேன்னா  மரணத்த வெத்தல பாக்கு வச்சு கூப்பிடறது மாதிரிதானே இருக்கும். 

நல்லத யாரு சொல்றாங்கிறத ஆராயறத விட்டுட்டு என்ன சொறாங்கண்கிறத மட்டும் கேட்டா ஏதும் குறைஞ்சிடாது.

தொடர்ந்து பேசுவோம்லே………!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here