ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்:

-அரையிறுதியில் சிந்து தோல்வி

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

இங்கிலாந்தின் பா்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் பி.வி.சிந்து 17-21, 19-21 என்ற நோ செட்களில் தாய்லாந்தின் போா்ன்பவீ சோசுவாங்கிடம் தோல்வி கண்டாா்.

தோல்வி குறித்துப் பேசிய பி.வி.சிந்து, ‘இந்த நாள் போா்ன்பவீயின் நாளாக அமைந்துவிட்டதாக நினைக்கிறேன். அவா் மிகச் சிறப்பாக ஆடினாா். அதனால் என்னால் எதுவும் செய்ய முடியாமல் போனது. நான் தேவையற்ற சில தவறுகளை செய்தேன். அதைத் தவிா்த்திருக்க வேண்டும். அந்தத் தவறுகள்தான் எனக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

எல்லோருமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று நினைப்பாா்கள். ஆனால் எனக்கான இறுதிச்சுற்று வாய்ப்ப்பு முடிந்துவிட்டது. எனது தவறுகளில் இருந்து நான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த ஒரு மாதத்துக்கு எனக்கு எந்தப் போட்டியும் இல்லை. அதனால் நான் தீவிரப் பயிற்சி பெற்று வலுவான வீராங்கனையாக மீண்டும் களமிறங்குவேன்’ என்றாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here