ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சரின் வழக்கு விசாரணை தொடர்கிறது – அன்வார் தகவல்

புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) ஒரு முன்னாள் அமைச்சரை விசாரித்து வருகிறது. அவரின் கூட்டாளி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் உண்மையிலேயே சம்பந்தப்பட்டவர் என கண்டறியப்பட்டால் வழக்கு மூடப்படாது  என்று டத்தோ ஶ்ரீ  அன்வர் இப்ராஹிம்  தெரிவித்தார்.

எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அசாம் பாக்கி மற்றும் பிற அதிகாரிகளுடனான சந்திப்பின் போது எழுப்பப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று என்று பி.கே.ஆர் தலைவர் கூறினார். இந்த வழக்கில், MACC வழக்குகளை சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை நான் சுட்டிக்காட்டினேன்.

ஊழல் உண்மையில் நடந்தது என்று விசாரணை காட்டினால் எந்த வழக்கும் மூடப்படாது என்று தலைமை ஆணையர் தனது உறுதிமொழியை அளித்தார் என்று அவர் திங்களன்று (மார்ச் 22) செய்தியாளர்களிடம் கூறினார்.

அன்வார் எந்த பெயர்களையும் குறிப்பிடவில்லை என்றாலும், கோலா லங்காட் எம்.பி. டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வழக்கை அவர் குறிப்பதாக நம்பப்படுகிறது.

மார்ச் 12 ஆம் தேதி பி.கே.ஆரை விட்டு வெளியேறுவதற்கு முன்பு எம்ஏசிசி அவரை விசாரித்தது. பிப்ரவரி 24ஆ ம் தேதி, அசாம் தனது நெருங்கிய கூட்டாளியான எம்.ஏ.தினகரன் ஒரு வாரத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர் ஜெயகுமாரை விசாரிப்பதாக உறுதிசெய்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஜெயக்குமாரை பின்னர் ஒரு மூத்த (பெரிகாத்தான் நேஷனல்) மந்திரி தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் பெரிகாத்தானை ஆதரிக்க வேண்டும் அல்லது கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here