முறையாக முகத்தை மூடினால் மட்டுமே முகக்கவசம்!

தாடைக்  கவசமாக மாறலாமா?

எதையும் முறையாகச் செய்தால் யாருக்கும் தீங்கு ஏற்பட வாய்ப்பில்லை. சாலை விதிகளை மீறினால் ஆபத்தும் உங்களோடு பயணிக்கிறது என்று பொருள். விதிமுறைகளைக் கடப்பிடிப்பது கடமை மட்டுமல்ல, அது பொது ஒழுங்கு என்பதையும் நம்ப வேண்டும்.

மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது பாதுகாப்புக்குத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது பொதுவிதி. எதற்கு தலைக்கவசம் என்கின்றவர்களுக்குத் தலைவிதி.  தலைக்கவசத்தால் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போய்விடும் என்பார்கள். இருந்தும் அலட்சியம் செய்கின்றவர்களாகத்தான் மக்கள்  இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

அலட்சியம் நம்மோடு பிறந்ததா?

அலட்சியம் நம்மொடு பிறக்கவில்லை. நாமே அலட்சியத்திற்கு இடம் கொடுத்து நட்பு கொள்கிறோம். கோவிட் -19 போல் ஒட்டுக்கொண்ட குணம் அது. இக்குணதை அவசியம் கழற்றி எறிய வேண்டும். அலட்சியம் ஒரு கெட்ட குணம். இதனால் இடையூறுகள் உயிர்ப்பலி நிச்சயம் ஏற்படும். அதனால் இக்குணத்தை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். 

ஆனாலும் நாம் அப்படிச் செய்வதில்லை. அலட்சியம் தொடர்ந்தால் இழப்புகள் நிச்சயம். இழப்பு என்பது பொருளாக இருந்தால் பரவாயில்லை. அதை மீண்டும் பெற முடியும். அதற்கான வழிகள் அதிகம் இருக்கின்றன. உயிர்ப்பலி நேர்ந்தால் அதன் இழப்பு ஒரு தொடர்கதையாகதான் இருக்கும். ஏழு தலைமுறையப்பாதிக்கும் என்கிறார்கள். 

இன்றைய கொரோனாவும் கூடுதலான  இழப்புகளைத்தான் ஏற்படுதிக்கொண்டிருக்கிறது. அரசின் தீவிரம் ஒரு பக்கம். இத்தொற்று நோயைக் குணப்படுத்த பொதுத்துறையினர் ஒரு பக்கம் என அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். 

ஆரம்பத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையில் மக்கள் கவனம் செலுத்தினர். அரசும் மிகக்கண்டிப்பாக இருந்தது. பெரும்பான்மையாக கூடுதல் கவனம் செலுத்தியும் வந்தனர். இப்போது அப்படியில்லையே! . கட்டெறும்பு தேய்ந்த கதையாயிற்றே!. ஏன் இப்படி  ஆயிற்று?

அரசு நிபந்தனைகள் அலட்சியப்படுத்தப்படுவதால் தான் கோவிட் நம்மை விட்டு அகலவில்லை. அலட்சியம் அட்டையாய் ஒட்டிக்கொண்டிருப்பதே காரணம். அலட்சியத்தை கழற்றி எறியாதவரை வரை தொல்லைகள், இடர்களை அனுபவித்துதான் ஆகவேண்டும். 

அலட்சியம் கைவிடப்படவேண்டும்.  கைவிடப்பட்டால்தான் கொரோனா  தொற்று  கட்டுக்குள் அடங்கும். 

என்ன செய்யலாம் ?

இப்போது வழக்கமாக உபயோகிக்கப்படும் முகக்கவச முறை ஒழுங்கற்றதாக இருக்கிறது.  முகக்கவசம் இருந்தும்  அதை முறையாக அணியாதவர்களும் இயக்க நடைமுறைய பின்பாற்றதாவர்களே! இவர்களை ஒழுங்கு செய்தால் கோவிட் -19 தூர நிற்கும் . அது நம்மை நெருங்க அஞ்சி விலகி ஓடும்.

இதில் அலட்சியம் காட்டாமல் இருந்தால் நிச்சயம் தொற்றினை ஒழித்துவிடலாம். இரண்டே வாரத்தில் இல்லாமல் செய்துவிடலாம்.

வீட்டை விட்டு வெளியில் வருவதிலிருந்து செல்லும் இடம் எங்கும் நம்மோடு இருக்க வேண்டியதாக அடையாளைகார்டு இருந்தது. அதோடு சுத்தமான முகக்கவசமு இருக்க வேண்டும் என்றாகிவிட்டது. இதற்கான காலம் வெகு நீண்டிருக்கிறது.

வீட்டிலிருந்து கிளம்பியதும் முகக்கவசம் முறையாக அணியப்பட்டிருக்க வேண்டும்.  அப்படிச்செய்தால்தான் கோவிட் கோபத்தோடு சீனாவின் வூகானுக்குத் திரும்பும். 

பாதுகாப்பு நம்மிடம்தான் இருக்கிறது. வேறு யாரும் கொடுத்து வைத்திருக்கச் செய்ய முடியாது. எனவே நம பாதுகாப்பை நாமே கைக்கொள்வோம். 

சொல்றத சொல்லிட்டொம்லே ! உஙகளுக்காக -பெஞச் பெரியசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here