வம்புக்கு மருந்துண்டு- வீம்புக்கு மருந்தில்லை

பெஞ்ச் பெரியசாமியின் ஓர் அலசல்

விதியின் விளையாட்டில் வட கொரிய தூதரகம்

ஒரு நாட்டின் சட்ட விதிகள்  நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. அதற்கு அந்நாட்டின் மக்கள் நலன், அரசு நலன், சூழல் நலன்   காரணண்களாக இருக்கின்றன என்பது பாமர்ரகளுக்கும் தெரியும்.  

ஒரு நாட்டின் உயர் மட்ட மக்களுக்குத் தெரியாமல் இது போனதா? அப்படியிருக்க வாய்ப்பில்லை. தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றால் எந்த சட்டத்தாலும் ஒன்றும் செய்துவிடமுடியாது. இப்படிப்பட்ட பின்னிலில்தான் வட கொரிய நாடு சிக்கியிருக்கிறது.  

ஒரு நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல குடியிருக்கும் நாட்டில் நாட்டின் சட்டத்தை பின்பற்றி நடக்க வேண்டுமல்லவா? சட்ட மீறல்களைச் செய்துவிட்டு அதை ஆதரிப்பவர்களாக இருந்தால் புறம்பு என்றுதான் அதற்குப்பெயர்.

வட கொரிய நாட்டுக்கு மலேசிய அர்சாங்கம் தூதரகத் தளம் அமைத்துக்கொடுத்திருக்கிறது.  தூதரகத்தன் செயல்பாடுகள் என்பது அரசு கொள்கைளோடு இணங்கி இருப்பதுதான். இணங்காதபோது வெளியேறுவதுதான் முறையான செயல். 

அப்படியில்லையென்றால் வெளியேற்றப்படுவதுதானே நடவடிக்கையாக இருக்கும். இதைத்தான் மலேசிய நீதித்துறை செய்திருக்கிறது. 

வட கொரியா தவறாகப் புரிந்துகொண்டதாகத்தான் பொதுக் கருத்து நிலவுகிறது. இருக்கும் இடைத்தில் அசிங்கம் செய்பவரை எவர்தான் ஆதரிப்பார்கள் .

 

ஒரு நாணய பரிவர்த்தனை தொடர்பில்  மலேசியா நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பின் காரணமாக வட கொரியா நட்பை முறித்துக்கொண்டிருக்கிறது.

குற்றம் செய்தவர் எந்த நாட்டுக்குரியவர் என்பதைவிட குற்றத்தின் தன்மைக்கே நீதி என்பதுதான் பொதுவுடைமை. இதைத்தான் மலேசிய நீதி கடைப்பிடித்திருக்கிறது. இது தவறு என்று அடம்பிடித்தால் வெளியேற்றுவதே சரியான முடிவாக இருக்கும். அதுதான் நடந்திருக்கிறது

தவற்றை தவறென்று உணராதவரை தவறு தவறாகத் தெரியாது. இது தான் நடந்திருக்கிறது.

வம்புக்கு மருந்துண்டு . வீம்புக்கு மருந்தே கிடையாது. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here