குடிநுழைவு அதிகாரிகளுக்கு கூடுதல் பயிற்சி

சிங்கப்பூர்,
குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) தன்னிடம் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு ஏஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வகை செயலியை உருவாக்கி உள்ளது.

இதன் மூலம் போலி கடவுச்சீட்டுக்கும் உண்மையான கடவுச்சீட்டுக்கும் இடையிலான வேறுபாட்டை எளிதில் கண்டறிய முடியும்.மின்னிலக்கக் காட்சிக்கூறுகள் மூலம் ஒரு பொருளின் நிகழ்நேர வடிவத்தைப் பெரிதாக்கிக் காட்டக்கூடியது இந்த ஏஆர் தொழில்நுட்பம்.

இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த செயலி ஆணையத்தின் பயிலகத்திலுள்ள கைக்கணினிகளில் நிறுவப்பட்டுள்ளது. வேறுபாட்டை உணர்ந்தறியும் வகையில், இச்செயலியின் ஆவணத் தொகுதியில் உலகின் 16 நாடுகளைச் சேர்ந்த 24 உண்மையான கடவுச்சீட்டுகளும் போலி கடவுச்சீட்டுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆணையத்தைச் சேர்ந்த சுமார் 50 அதிகாரிகள் கடந்த டிசம்பர் முதல் இந்த முன்னோடி சோதனை முறையில் பயிற்சிபெற்று வருகிறார்கள்.

மின் னிலக்க வடிவிலான கடவுச் சீட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைக் கற்று வரும் அவர்கள், ஆவணச் சோதனை (அடிப்படை) பாடப்பிரிவின் ஒரு பகுதியாக இந்தப் புதிய சோதனை முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here