மாணவர் படைப்புகள்

வாய்மொழி வந்த பழமொழிகளும் நம்பிக்கைகளும்

இன்றைய நூற்றாண்டில் பலர் பல நம்பிக்கைகளைக் கடைபிடிப்பது மட்டுமல்லாமல் நம்மை அடுத்து வரும் தலைமுறைக்கும் அவற்றைக் கற்று தருகின்றனர். அதை நான் தவறு என்று கூறவில்லை, அதை ஆராயாமல் கடைப்பிடிப்பதைதான் தவறு என்கிறேன்.

முதலில் பழமொழிகளைச் சற்று ஆராய்வோம். ஆமை புகுந்த வீடு உறுபடாது என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்.ஆனால் அது நிஜமல்ல! ஆம்பி பூத்த வீடு உறுபடாது என்ற பழமொழிதான் உண்மையானது. ஆம்பி எனும் சொல் இடி விழும்பொழுது முளையும் காளான் என்று பொருட்படுகிறது. இந்த வகை காளான் விஷத்தன்மை கொண்டிருப்பதால், அவை வீட்டை சுற்றி விளையாடும் சிறு குழந்தைகளைப் பாதிக்கலாம் என்பதற்காக நமது முன்னோர்கள் அத்தகைய பழமொழியை அறிமுகப்படுத்தினர்.எனினும், கால வழக்கில் இந்த பழமொழி ஆமை புகுந்த வீடு உறுபடாது என்று மாறிவிட்டது. ஒன்றை கூற வேண்டுமென்றால் சீனர்களின் ஃவெங் சுவெய் படி ஆமை அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும்.

அடுத்து சில நம்பிக்கைகள்…கோட்டான் அலறினால் ஆபத்தின் அறிகுறி என்று வீட்டில் உள்ள பாட்டி புலம்ப ஆரம்பித்துவிடுவார். இப்போது சற்று சமய அறிவையும் வளர்த்துக் கொள்வோம். கோட்டான் அதாவது ஆந்தை என்பது லட்சுமி தேவியின் வாகனமாக கருதப்படுகிறது. ஆதலால் ஆந்தையை இழிவாக கருதாதீர்கள். அதன் வருகை நன்மையின் வருகையாகும்.

இதன்வழி நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நம் பாரம்பரியத்திலும் சமயத்திலும் அனைத்தும் நல்லதாகவே இயற்றப்பட்டுள்ளன. ஆதலால், எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு, எனும் திருக்குறளுக்கு ஏற்ப வாழ்வில் கடைப்பிடித்து பயன் பெருவோம். நன்றி, வணக்கம்.

யாகாஷ் தினேந்திரன்
32000 சித்தியவான், பேராக்.
படிவம் 2,
தேசிய வகை டிண்டிங்ஸ் இடைநிலைப்பள்ளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here