தொகுப்பாளினி இந்தியில் பேசினாராம்!

– மேடையை விட்டு இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ள, ’99 சாங்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள், பாடர்கள் , பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்தப் படத்தின் தமிழ்ப்பதிப்பின் வசனங்களை இயக்குநர் கெளதம் மேனன் எழுதியுள்ளார்.

இசை வெளியீட்டின்போது இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி தமிழில் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென இந்தியில் பேசினார். உடனே இந்தி? எனக் கேட்டவாறு மேடையை விட்டு கீழிறங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘முதல்லயே கேட்டேன், தமிழ் பேசுவீங்களான்னு’ என்றும் தொகுப்பாளினியை நோக்கி கேள்வி எழுப்பினார்.’சார் நான் தமிழ் தான் பேசுவேன். சும்மா வெல்கம் பண்ணலாம்ன்னு’ என்று பதிலளித்தார் பதறிப்போன அந்த தொகுப்பாளினி.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here