சாலையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த பாகிஸ்தானிய ஆடவர் கைது

குளுவாங்: ஜாலான் கோத்தா திங்கி – குளுவாங்கில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாகிஸ்தானிய இளைஞன் ‘wheelie’ சாகசம் செய்ததால் கைது செய்யப்பட்டார். குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், பஹ்ரைன் முகமட் நோர் கூறுகையில் 22 வயது இளைஞன் ஆபத்தான நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவரது தரப்பால் கண்டறியப்பட்டதாக நோ கூறினார்.

புல்வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்த சந்தேகநபர் மீது ஓட்டுநர் அனுமதிப்பத்திரம், காலாவதியான மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் (LML) மற்றும் காப்புறுதித் தொகை இல்லை என்பதற்காக வழக்குத் தொடரப்பட்டது. “SYM VF3i மோட்டார்சைக்கிளில் பாக்கிஸ்தானியர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் முன்பக்க டயரை உயர்த்தி ‘wheelie’ ஓட்டுவதைக் காட்டும் முகநூக் Kluang paranormal research ஆல் வீடியோ பதிவு கண்டறியப்பட்டது.

குளுவாங் மாவட்ட போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவின்  உறுப்பினர்கள்  நேற்று மாலை 6.45 மணியளவில் தாமான் மாஜுபாடுவில் உள்ள ஒரு கடைக்கு முன்னால் சந்தேக நபரைக் கைது செய்தனர் என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 42(1)ன் கீழ் கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சந்தேக நபர் தற்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் (கேபிஜே) பிரிவு 117 இன் கீழ் இன்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here