-முறையாக அறிவிக்காவிடில் அபராதம்
கனடா:
எல்லை சேவைகள் முகமை அறிவிப்பு…கஞ்சாவுடன் எல்லையைக் கடக்கும்போது முறையாக அறிவிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுமென கனடா எல்லை சேவைகள் முகமை அறிவித்துள்ளது.
இதை அறிவிக்காவிட்டால் அல்லது அறிவிப்பில் துல்லியமான தகவல்களை வழங்காவிட்டால், 2,000 அபராதம் விதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா எல்லை சேவைகள் முகமை, கஞ்சா அல்லது கஞ்சா தயாரிப்புகளுடன் கனேடிய எல்லையை கடப்பது கடுமையான குற்றமாகும். இது குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் எங்கள் அதிகாரிகள், முறையாக அறிவிக்க தவறும் பயணிகளுக்கு பண அபராதம் விதிக்கத் தொடங்குவார்கள் கனடா எல்லை சேவைகள் முகமை கூறியுள்ளது.
இந்த போதைமருந்து கனடாவில், சமையல் பொருட்கள் மற்றும் பிற கஞ்சா தயாரிப்புகளில் சட்டப்பூர்வமானது என்றாலும், அதை எல்லை தாண்டிக் கொண்டு வருவது கடுமையான குற்றமாகும்.