– சட்ட சிக்கலில் பிரதமர் போரிஸ்
மேலும், அமெரிக்க பெண் தொழிலதிபரான குறித்த பெண்மணியுடன் அந்தரங்க குறுந்தகவல் பரிமாற்றம் தொடர்பிலும் பிரதமர் ஜோன்சன் பதிலளிக்க நேரிடும் என கூறப்படுகிறது.
போரிஸ் ஜோன்சன் தலைமையிலான இந்த அரசாங்கமானது ஒழுக்கமான நெறிமுறை நடத்தைகளை கடைப்பிடிப்பதில் அக்கறை இல்லாத ஒரு ஒழுக்கக்கேடான அரசாங்கமாக அறியப்படும் அபாயத்தில் உள்ளது என பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போரிஸ் ஜோன்சன் லண்டன் மேயராக இருந்த காலகட்டத்தில் தங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் 35 வயதான ஆர்குரி,
தமது தனிப்பட்ட மொபைலில் இருந்து ரகசியமாக அந்தரங்க புகைப்படங்களைக் கேட்டு ஜோன்சன் பல முறை கெஞ்சியதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கான பயணத்தில், போரிஸ் ஜோன்சன் ஜெருசலேமில் இருந்தபோது டெல் அவிவில் தங்கியிருந்த ஆர்கூரியுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க் நகருக்கு அரசுமுறை பயணமக்ச் சென்றிருந்த போரிஸ் ஜோன்சன், ஆர்குரியை ஹொட்டல் ஒன்றில் சந்தித்ததும் அவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
போரிஸ் ஜோன்சன் லண்டன் மேயராக இருந்த காலகட்டத்திலேயே அவருடன் நெருக்கமான உறவை கொண்டிருந்ததாக கூறுகிறார் ஆர்குரி,
அப்போது போரிஸ் ஜோன்சன் இரண்டாவதாக மெரினா வீலர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, போரிஸ் ஜோன்சன் கட்டாயம் இந்த உறவு தொடர்பில் வெளிப்படையாக பேசியிருக்கலாம் என்ற கருத்தும் பொதுமக்களிடையே முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் அந்தரங்க தொடர்புகள் என்பது ஒரு தனிப்பட்டது , ஆனால் தனிப்பட்ட நெருக்கத்தின் காரணமாக ஒப்பந்தங்களையும் பொதுப் பணத்தையும் வழங்குவதில் அவர்ளுக்கு சாதகமாக செயல்படுவது என்பது முற்றிலும் வேறுபட்டது என அரசியல் வட்டாரத்திலும் கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே போரிஸ் ஜோன்சன் கிரேட்டர் லண்டன் ஆணையத்தின் முன் சாட்சியாக ஆஜராக சட்ட சம்மனை எதிர்கொள்ளக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
உறுதியான காரணங்கள் இன்றி, அவர் இந்த ஆணையத்தின் முன்பு ஆஜராக மறுத்தால், கடுமையான அபராதம் அல்லது 3 மாத சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.