வவ்வால் மூலம் பரவிய கொரோனா.

ஆய்வில் வெளியான தகவல். உலக நாடுகள் அதிருப்தி- கண்டனம்

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவில்லை வவ்வாலிருந்து பரவியது என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா,  பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது .அதனால் கொரோனா எப்படி தோன்றியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஒன்று ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழு கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்குச் சென்று ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் சீனா விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர். இந்தக் குழு உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற பல்வேறு இடங்களில் சோதனை செய்துள்ளது. மேலும் வூகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தை, பரிசோதனைக் கூடத்தில் செயற்கையாக உருவாக்கிய போது இங்கிருந்து பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் முடிவு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்றும் மிக விரைவில் அதிக பூர்வமாக வெளியிடப்படும் கூறியுள்ளது.

மேலும் உலக சுகாதார நிறுவனமும் சீனாவும் இணைந்து நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் நான்கு சூழ்நிலைகளிருந்து பரவி இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர்.

அதில் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதருக்கு வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் வவ்வால் இடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. குளிரூட்டப்பட்ட உணவு பொருட்கள் வழியாக கொராேனா வைரஸ் பர வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் கொரோனாவை உண்டாக்கும் வைரஸ் போன்ற ஒரு வைரஸ் வவ்வால், எறும்புத்தின்னி ,கீரி ,பூனைகள் போன்ற விலங்குகளிடம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் வூகான் நகர சந்தையிலிருந்து தான் பரவியது என்பதை குறித்து இந்த அறிக்கையில் எதுவும் உறுதிபட தெரிவிக்கப்படவில்லை.

அதனால் அந்த அறிக்கை சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் என்பவர் தெரிவித்தார்.

மேலும் உலக சுகாதார அமைப்பின் அந்த அறிக்கையை அமெரிக்காவும், இங்கிலாந்தும் கடுமையாகக் கண்டித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா ,கனடா ,உள்ளிட்ட 12 நாடுகள் கையெழுத்திட்ட அறிக்கையில் வைரஸ் தோற்றம் குறித்து விசாரணை போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here