Home உலகம் மெழுகுவத்தி ஏந்தி மக்கள் போராட்டம்

மெழுகுவத்தி ஏந்தி மக்கள் போராட்டம்

-மியன்மாரில்  ராணுவ எதிர்ப்பாளர்கள்

 

மியன்­மா­ரில் ஆட்­சிக் கவிழ்ப்­புக்கு எதி­ரான போராட்­டம் ஓய­வில்லை. ராணு­வத்­தின் அடக்கு­மு­றைக்கு நூற்­றுக்­க­ணக்­கானோர் பலியாகியுள்ளனர்.

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தங்களுடைய எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

 

நேற்று இரவு முழுவதும் ஆர்ப் பாட்டக்காரர்கள் மெழுகு­வத்தி ஏந்தி ஆர்ப்பரித்தனர்.

இவ்­வே­ளை­யில் தனது தூத­ர­கத்­தி­ல் உள்ள அ­வ­சி­ய­மற்ற ஊழி­யர்­கள் மியன்மாரைவிட்டு வெளி­யே­று­மாறு அமெ­ரிக்க அர­சாங்­கம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இரண்டு மாதங்­க­ளாக நடை­பெற்று வரும் போராட்­டத்­தில் குறைந்­தது 521 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். கடந்த சனிக்­கி­ழமை மட்­டும் ஒரே நாளில் 141 பேர் உயி­ரி­ழந்­த­னர் என்று அர­சி­யல் கைதி­க­ளுக்­கான உதவி சங்­கம் தெரி­வித்­தது.

 

செவ்­வாய்க்கிழ­மை­யன்­றும் எட்­டுப் பேர் மாண்­ட­னர் என்று அச்சங்­கம் கூறி­யது. ராணு­வத்­தின் ஊர­டங்­கை­யும் மீறி நேற்று முன்தினம் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான வர்கள் இரவு முழுவதும் கண்விழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

நேற்று விடி­யற்­கா­லை­யில் பேர­ணி­யும் நடை­பெற்­ற­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

நோபெல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை ராணு­வம் கவிழ்த்­த­தி­லி­ருந்து மியன்­மா­ரில் தொடர்ந்து பதற்றம் நில­வு­கிறது. ஆங் சான் சூச்­சி சிறை­யில் அடைக்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்­ப­டுத்­தப் ­பட்­டுள்­ளது.

எல்­லை­யோ­ரங்­களில் ராணு­வத்­துக்­கும் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கும் இடையே மோதல் வெடித்­துள்­ளது. இத­னால் எல்­லைப்பகு­தி­களில் அகதிகளின் எண்ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

இந்த நிலை­யில் தாய்­லாந்தை எல்­லை­யா­கக் கொண்ட கிழக்கு எல்­லை­யோரம் வசிக்­கும் காரென் தேசிய கிளர்ச்­சி­யா­ளர்­கள் குழு, மியன்மார் ராணு­வத்­துக்கு எதி­ரான தாக்­கு­த­லுக்­குத் தயா­ராகி வரு­வ­தாகக் கூறியுள்ளது.

மியன்­மா­ரி­லி­ருந்து தப்­பி­யோ­டும் காரென் மக்­க­ளுக்கு குறிப்­பாக தாய்­லாந்து அடைக்­க­லம் தர வேண்­டும் என்­றும் மியன்­மார் ராணு­வத்­து­ட­னான உறவை அனைத்­து­லக நாடு­கள் துண்­டித்­துக்கொள்ள வேண்­டும் என்­றும் அந்­தக் குழு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here