பணிப்பெண்ணாக வேடமிட்டு

 April Fool செய்த ஜில் பைடன்!

அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பணிப்பெண்ணாக வேடமிட்டு பிராங்க் செய்து அசத்தியுள்ளார்.

ஏப்ரல்-1 முட்டாள்கள் தினத்தில் பத்திரிகை நிருபர்களையும் மற்ற பணியாளர்களையும் பிராங்க் செய்ய ஜில் பைடன் திட்டமிட்டுள்ளார்.

கலிபோர்னியாவிலிருந்து வாஷிங்டனுக்கு விமானத்தில் பயணித்து வந்த ஜில் பைடன், கரு நிற முடியை வைத்துக்கொண்டு, முகக்கவசம் அணைந்து ‘ஜாஸ்மின்’ என்ற பெயரில் பணிப்பெண் போல வந்துள்ளார்.

விமானத்திலிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி உபசரித்துள்ளார். அவரை யாரும் அடையாளம் காணவில்லை என தெரிகிறது.

பின்னர், தரையிறங்கியதும் செய்தியாளர் சந்திப்புக்கு அதே ‘ஜாஸ்மின்’ என்ற பணிப்பெண் மேடைக்கு வந்துள்ளார்.

அனைவரும் ஒன்றும் புரியாமல் பார்த்த அந்த நேரத்தில், அனைவரின் முன்னிலையிலும் விக்கை கழட்டி ‘April Fools’ என கூறியுள்ளார். அங்கிருந்த நிருபர்கள், பணியாளர்கள் என அனைவரும் திகைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வின் ஒரு புகைப்படமோ அல்லது வீடியோ  காட்சியோ வெளியாகவில்லை. ஆனால், பத்திரிக்கையாளர்கள் ஜில் பைடன் செய்த குறும்புத்தனத்தை ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here