முறிந்த காதல்… அழுத்திய கடன் சுமை

சமையலறையையே மோசமான தொழில் செய்யும் இடமாக்கிய பெண்

நீண்ட கால காதல் முறிந்ததால் போதையின் பாதையில் சென்ற ஒரு பெண், கடனைத் தீர்ப்பதற்காக தனது சமையலறையையே போதைப்பொருட்கள் விற்பனைக்கூடமாக்கினார்.

மான்செஸ்டரைச் சேர்ந்த Natalie Schmitz (35), தனது நீண்ட கால காதல் முடிவுக்கு வரும் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

ஆகவே, காதல் தோல்வி அவரை போதையின் பாதையில் கொண்டு விட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்த வாங்கிய கடனைத் தீர்ப்பதற்காக, போதைப்பொருள் விற்கும் கூட்டத்தின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார் Natalie.

அது என்ன நிபந்தனை என்றால், வாங்கிய கடனைத் தீர்ப்பதற்காக Natalie தன் வீட்டிலேயே போதைப்பொருள் விற்பனை செய்யவேண்டும்.

அதன்படி தன் வீட்டையே போதைப்பொருள் விற்பனை செய்யும் கடையாக்கிய Natalie, ஆறு வாரங்கள் போதைப்பொருட்களை விற்பனை செய்துவந்துள்ளார்.

இதுக்குறித்து  போலிசாருக்கு தகவல் கிடைக்க, அவர்கள் Natalie வீட்டை ரெய்டு செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட Natalie, தான் செய்த தவறுக்காக உண்மையாகவே வருந்தியதுடன், நான் இவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன் என்பதை என்னாலேயே நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், உங்கள் வீட்டில் சட்ட விரோத பொருட்கள் ஏதாவது உள்ளனவா என்று பொலிசார் கேட்க, வீட்டில் கொஞ்சம் போதைப்பொருட்களும், பணமும் இருப்பதையும் அவரே மறைக்காமல் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

ஆகவே, அவர் தன் தவறை உணர்ந்துகொண்டதால், நீதிமன்றம் அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்தாலும், Natalie உடனே சிறை செல்லத்தேவையில்லை என்று கூறிவிட்டது.

அத்துடன், மூன்று மாதங்களுக்கு, Natalie இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்லவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், போலிசார் சாதாரண உடையில் வீட்டை ரெய்டு செய்துகொண்டிருக்க, அங்கு ஒருவர் வந்துள்ளார்.

அவரை பொலிசார் விசாரிக்க, தான் போதைப்பொருள் வாங்க வந்ததாக கூறியுள்ளார் அவர். அவரை போலிசார் சோதனையிட, அவரிடம் கொஞ்சம் போதைப்பொருள் இருந்ததால், அவரையும் கைது செய்தனர் பொலிசார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here