இந்திய – சீன லடாக் எல்லை மோதல் விவகாரம்.. ..!

இன்று 11ஆவது சுற்றுபேச்சுவார்த்தைை

லடாக் மோதல் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே இன்று 11-ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் முற்றிலுமாக படைகளை திரும்பப்பெறுவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. அப்போது இரு நாடுகளும் அங்கு தங்களது படைகளை குவித்தன.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்‍கவும், படைகளை வாபஸ் பெறவும், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே இதுவரை 10 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

10- ஆவது சுற்று பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பங்கோங் சோ ஏரி கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த இரு நாட்டு படைகளும் கடந்த பிப்ரவரி மாதம் திரும்பப்பெறப்பட்டன.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே 11- ஆவது சுற்று பேச்சுவார்த்தை, கிழக்கு லடாக்கின் சுசுல் செக்டாரில் இந்திய பகுதிக்குள் இன்று நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் பிரச்சினைகள் , அடுத்தகட்ட படை வாபஸ் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்‍கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

 

கமெண்ட்: லடாய்களைத் தவிர்க்க எல்லைப்பேச்சு முக்கியம்.ஈதை சீனா உணர்வில்லை என்பதற்கு 11 ஆவது சுற்று ஒன்றே சாட்சியம் . தப்பை உணராவிட்டால் எத்தனை சுற்றுப் பேச்சும் எடுபடாது. நேரம் வீண்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here