உலக பொருளாதார வளர்ச்சி… இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்

பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 3 சதவிதித்திற்கும் குறைவாகவே வளர்ச்சியடையும் என சர்வதேச கண்காணிப்பு நிதியம் கூறியுள்ளது. ஒட்டு மொத்த வளர்ச்சியில், இந்தியா மற்றும் சீன நாடுகளின் பங்களிப்பு 50 சதவிகிதமாக இருக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது.

உலகளவில் பொருளாதார மந்தநிலை உச்சத்தில் இருக்கும் நிலையில்,  2023 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 3 சதவிதித்திற்கும் குறைவாகவே இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா (Kristalina Georgiva) கூறியுள்ளார்.

1990ஆம் ஆண்டிற்கு பிறகு மிக குறைவாக வளர்ச்சி என குறிப்பிட்ட ஜார்ஜிவா கடந்த 20 ஆண்டுகளின் சராசரியான 3 புள்ளி 8 சதவிகிதத்தை விட குறைவானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். நடப்பு நிதியாண்டில் ஆசிய நாடுகளின் வளர்ச்சியே மற்ற நாடுகளுக்கு உதவும் என கூறிய அவர், குறிப்பாக இந்தியா மற்றும் சீனா நாடுகளின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என தெரிவித்தார்.

வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பது, வளர்ச்சிக்கான நடுத்தர கால வாய்ப்புகளை மேம்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு ஜார்ஜிவா அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், மீண்டு வந்த பொருளாதாரம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் மீண்டும் சுணக்க நிலைக்கு செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here