ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் தங்க தமிழச்சி!

குவியும் வாழ்த்து!!

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்தாண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார். அதன் மூலம் பரவலாக அறியப்பட்ட அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும் அவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். அவரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது தன்னுடைய லட்சியம் என கூறியிருந்தார்.

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்ற இளவேனில் பெற்றார் வரும் ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளவேனில் வாலறிவன் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவரது வெற்றிப்பயணம் மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கமெண்ட்: அருமை தங்கச்சி , நாங்கெல்லாம் உன் கட்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here