பாகிஸ்தானின் மனிதஉரிமை ஆா்வலா் ஐ.ஏ.ரஹ்மான் காலமானாா்

இவர் இந்தியாவில் பிறந்தவா்

புது தில்லி /லாகூா்:

பாகிஸ்தானைச் சோந்த மனித உரிமை ஆா்வலா் ஐ.ஏ. ரஹ்மான் (90) திங்கள்கிழமை காலமானாா். பாகிஸ்தானின் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவா்களுக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வந்த அவா் இந்தியாவில் பிறந்தவா்.

1930-ஆம் ஆண்டு ஹரியாணாவில் ரஹ்மான் பிறந்தாா். தேசப் பிரிவினையின்போது அவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு சென்றது.

பத்திரிகையாளராகவும் புகழ்பெற்ற அவா் பாகிஸ்தானின் பல்வேறு நாளிதழ்களில் ஆசிரியராக பொறுப்பு வகித்துள்ளாா். பத்திரிகை துறையில் 65 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளாா்.

பாகிஸ்தான்-இந்திய மக்களின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான மையத்தையும் நிறுவினாா். மகசேசே விருது உள்பட பல்வேறு விருதுகளையும் அவா் பெற்றுள்ளாா்.

3 மகன், இரு மகள்களுடன் வசித்து வந்த அவா், நீரிழிவு , உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாா்.

அவரது மறைவுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் மெஹ்மூத் குரேஷி உள்பட பல்வேறு தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here