பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை !!

– படத்தில் நடிக்கிறார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்களிடையே மிகவும் பிரபலமாகவுள்ளது. இதில் முல்லையாக நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட, அவருக்கு மாற்றாக நடிக்க வந்தவர் தான் காவ்யா.

ஆரம்பத்தில் அவருடைய தோற்றம் நடிப்பு உள்ளிட்டவை சித்ராவுடன் ஒப்பிடப்பட்டு ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். ஆனால் தற்போது அவர் முல்லையாக மனதில் நின்றுவிட்டார் என ரசிகர்கள் புகழாரம் சுட்டியுள்ளனர்.

தற்போது கலைத்துறையில் அடுத்த கட்டமாக நடிகை காவ்யா சினிமாவில் கால்பதிக்கிறார். சக்திவேல் என்பவர் இயக்கும் இந்த படத்தில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று பிரபலமான வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகனாக ‘காதல்’ பரத் நடிக்கிறார். இதற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் பரத், வாணி போஜன், காவ்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டர். தற்போது நடிகை காவ்யாவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here