காவல் உதவி ஆய்வாளர் அட்டூழியம்

4 பேருக்கு பலத்த காயம்!

தமிழக மாவட்டம் கோவையில் கொரோனா விதிகளை காரணம் காட்டி உணவகத்தில் புகுந்து காவல் உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உணவகங்கள், தேநீர் கடைகள் 50 சதவீத இறக்கைகளுடன் இரவு 11 மணி வரை செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில் இயங்கிவரும் உணவகத்தில் இரவு 10.20 மணியளவில் காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து நுழைந்தார்.

அப்போது, விதிகளை மீறி கடையை நடத்திவருவதாகக் கூறி ஹோட்டல் ஊழியர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், உணவகத்துக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த வடிக்கையாளர்களை வெளியேறச் சொல்லி லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணின் தலையிலும் பலமாக  அடி விழுந்துள்ளது.

இதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உணவகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

அதன் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, அந்த உணவக உரிமையாளர் மோகன்ராஜ் காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் முத்து காவல் கட்டுப்பட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் என்றும் பாராமல் உதவி ஆய்வாளர் லத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கமெண்ட்: புத்தியைப் பயன்படுத்தியிருந்தால் லத்திக்கு வேலை இருந்திருக்காது! இவர்கள் போன்றவர்கள் களையெடுக்கப்பட வேண்டாமா? இடம் மாற்றம் நன்மை தராது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here