உலகில் முதல் முறையாக சீனாவில் நடைமுறை

ஒட்டகங்களுக்கு ட்ராபிக் சிக்னல்…!

உலகில் முதல் முறையாக ஒட்டகங்களுக்கு போக்குவரத்து ட்ராபிக் சிக்னலை சீன அரசு டன்ஹூவாங் நகரில் அமைத்துள்ளது. 

சீனாவின்,டன்ஹுவாங் நகரில் உள்ள பாலைவனத்தின் மிங்ஷா மலைப்பகுதி பிரபலமான சுற்றுலாத் தளமாக இருந்து வருகிறது.

மேலும் இது “சிங்கிங் சாங்(பாட்டுப்பாடும் மலை)” மலை என்றும் அழைக்கப்படுகிறது.ஏனெனில்,சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் நடந்து செல்லும்போது அல்லது மணலிலிருந்து சறுக்கும்போது பாடல் பாடுவது போன்று ஒரு விதமான சத்தம் ஏற்படும்.

இத்தகைய காரணத்தினாலும்,மேலும், இங்கு ஒட்டகச்சவாரி செய்வதற்காகவும் மக்கள் அதிகமாக வருகின்றனர்.எனவே,இப்பகுதியில் போக்குவரத்து தொடர்பான சில விதிமுறைகளை தற்போது சீன அரசு அறிமுகப்படுத்தியுள்ளது,

அதனடிப்படையில்,மிங்ஷா மலைப்பகுதியில் ஒட்டகங்களுக்கான ட்ராபிக் சிக்னலை சீன அரசு அமைத்துள்ளது. உலகில் ஒட்டகங்களுக்கென்று ட்ராபிக் சிக்னல் அமைப்பது இதுவே முதல் முறையாகும்.

சுற்றுலாப் பயணிகள் , ஒட்டகங்கள் இருவருக்கும் உதவும் வகையில் இந்த ட்ராபிக் சிக்னல் உள்ளன. சிக்னலில் பச்சை நிறம் காட்டினால் ஒட்டகங்கள் சாலையைக் கடக்க வேண்டும். அதே சமயம், சிக்னல் சிவப்பு நிறமாக மாறும்போது சுற்றுலாப் பயணிகள் சாலையைக் கடக்க வேண்டும்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஒட்டக சவாரி செய்யும்போது பாதுகாப்பாகவும் இருக்க முடியும், மேலும் சாலை பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என சீன அரசு கூறியதாக, சீனாவின் செய்தி ஊடகமான சி.என்.என்(CNN) தெரிவித்துள்ளன.
கமெண்ட்: நல்ல காலத்திலேயே மனிதன் சிக்கனலை மதிக்க மாட்டானே! இதிலே சிவப்பு விளக்குன்னா கேட்கவா வேணும்! மீறல்கள்தானே சீனாவோட வேல. மீறலேனா தூங்க மாட்டானே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here