மனைவியை காப்பாற்ற பினாங்கு கடலில் குதித்த கணவர்

ஜார்ஜ் டவுன்: பினாங்கு பாலத்திலிருந்து  ஒரு நபர் தனது மனைவியைக் காப்பாற்ற கடலில் குதித்தார். இந்த சம்பவம் இன்று (ஏப்ரல் 16) மாலை 4.40 மணியளவில் நடந்ததாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இது தீவிலிருந்து 1 கி.மீ தூரத்தில் பாலத்தின் தீவு புறத்தில் நடந்தது. அந்தப் பெண் கடலில் விழுந்ததை நாங்கள் கண்டோம்.

நாங்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு அவரது கணவரால மீட்கப்பட்டு பாலத்தின் அருகில் கொண்டு வரப்பட்டார். எங்கள் குழு பின்னர் அந்தப் பெண்ணை அமைதிப்படுத்துவதற்கு ராப்பெல்லிங் முறையைப் பயன்படுத்தியதாக கூறினார்.

பின்னர் தம்பதியினர் மீட்கப்பட்டு படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று திணைக்களம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது தம்பதியரின் மகன் என்று நம்பப்படும் ஒரு சிறுவன் பாலத்தின் அருகே காத்திருந்தார்.

உதவி தேவைப்படுபவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள Befrienders  தொடர்பு கொள்ளலாம். எண்களின் முழு பட்டியல் மற்றும் இயக்க நேரங்களுக்கு, www.befrienders.org.my/centre-in-malaysia க்குச் செல்லவும் அல்லது 03-7627 2929  என்ற எண்ணில் அழைக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here