MyBayar பயன்பாட்டின் வழி 89.02 மில்லியன் தொகை கிடைத்துள்ளது

கோலாலம்பூர்: MyBayar  சம்மன்  இணையதளம் மற்றும் பயன்பாட்டின் வழி வாகனமோட்டிகளிடம்  இருந்து  ஏறக்குறைய 90 மில்லியன்   வெள்ளி மதிப்பிலான சம்மன்களுக்கு தீர்வு  காணப்பட்டுள்ளதாக துணை ஆணையர் டத்தோ அஜிஸ்மான் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (ஜேஎஸ்பிடி) இயக்குனர், மார்ச் 25 ஆம் தேதி MyBayar சம்மன் தொடங்கப்பட்டதிலிருந்து 89.02 மில்லியன்  தொகையில் 814,622 போக்குவரத்து சம்மன்கள் முடிவுக்கு வந்துள்ளன.

வியாழக்கிழமை (ஏப்ரல் 15) காலாவதியான MyBayar வழியாக சம்மன் செலுத்துவர்கள்  50% தள்ளுபடியை  பயன்படுத்திக் கொண்டனர். கடைசி நாளில் மட்டும் 38,306 சம்மன்கள் 4.2மில்லியன்  தொகைக்கு தீர்வு காணப்பட்டன என்று அவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) தொடர்பு கொண்டபோது கூறினார்.

மைபேயர் சமன் பயன்பாடு மற்றும் வலை போர்ட்டலில் 814,622 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர் என்று டிசிபி அஜிஸ்மான் தெரிவித்தார்.

இது எங்கள் முதல் பயன்பாடு மற்றும்  போர்டல் என்பதால் சில  குறைபாடுகள் இருப்பதை நாங்கள் அறிவோம். இதுவரை 6,083 மின்னஞ்சல் புகார்கள் வந்துள்ளன. நாங்கள் அவ்வப்போது  மேம்படுத்துவோம் என்று அவர் கூறினார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட MyBayar சம்மன் பயன்பாட்டின் மூலம் சாலை சம்மன் செலுத்துபவர்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சலுகை மார்ச் 25 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், புக்கிட் அமான் 50% தள்ளுபடி காலத்தை ஏப்ரல் 15 வரை நீட்டித்தது.

தங்களது சம்மன்களை தீர்ப்பதில் பொதுமக்கள் வழங்கிய ஊக்கத்தால் நான்கு நாள் நீட்டிப்பு வழங்கப்பட்டதாக டி.சி.பி அஜிஸ்மான் தெரிவித்திருந்தார்.

மார்ச் 25 ஆம் தேதி MyBayar சம்மன் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​போலீஸ் படைத்தலைவர்  டான் ஸ்ரீ அப்துல் ஹமீத் படோர், போலீஸ் சேவையின் தரத்தை பொதுமக்களிடம் மேம்படுத்துவதற்காக இந்த பயன்பாடு உருவாக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here