ஷாஆலம்: கிள்ளான் ஜாலான் பண்டமாரில் பழுதுபார்த்து கொண்டிருந்த பேருந்தில் இருந்த ஜேக் விழுந்ததில் ஆடவர் நசுங்கி உயிரிழந்தார். தென் கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி சம்சுல் அமர் ராம்லி, நேற்று இரவு இந்த சம்பவம் குறித்து அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் பஸ்ஸின் அடியில் இருந்து வாகனத்தின் ஹைட்ராலிக் அமைப்பை சரிசெய்து கொண்டிருந்தபோது ஜேக் (jack) திடீரென சரிந்து விழுந்தது அவர் நசுக்கப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சபாவைச் சேர்ந்த 33 வயதுடைய நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெங்கு அம்புவான் ரஹிமா கிள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் ஷம்சுல் அமர் தெரிவித்தார். – பெர்னாமா









