மக்கள் ஓசையுடன் வாங்க வாசிக்கலாம்

10 நிமிடம் தாப்பா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

நேற்று மலேசியா கொண்டாடிய ‘Jom membaca bersama  10 minit  எனும் வாங்க வாசிக்கலாம் 10 நிமிடம் எனும் நிகழ்ச்சியை மக்கள் ஓசை ஃபேஸ்புக் நேரலை (Facebook Live) வாயிலாக தாப்பா நூலகத்தில் தாப்பா தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கத்துடன் இணைத்து நடத்தியது.

இதில் பல தமிழ்ப்பள்ளிகள் மக்கள் ஓசையுடன் இணைந்து நேரலையில் கண்டு உடன் வாசித்ததுடன் மக்கள் ஓசையைப் பின்பற்றி பள்ளிகளிலும் வாசிப்பு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த வகையில் தாப்பா தமிழ்ப்பள்ளி, திறன் பலகையின் வாயிலாக மாணவர்களுக்கு மக்கள் ஓசையின் ‘வாங்க வாசிக்கலாம் 10 நிமிடம் எனும் நிகழ்ச்சியைக் காண்பதற்கு ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன் வகுப்பு வாரியாக வாசிப்பு நேரத்தையும் அனுசரித்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் வனஜா அண்ணாமலை தெரிவித்தார்.

மக்கள் ஓசையின் இத்திட்டம் வரவேற்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பாடம் படித்தல் வேறு, வாசிப்புப் பழக்கம் என்பது வேறு. வாசிப்பின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற பயனுள்ள திட்டங்களை மக்கள் ஓசை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

-ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here