தாவரங்களுடன் கண்ணாடிக் கூண்டு

முகக்கவசமாக பயன்படுத்தும்  நபர்

இப்போதெல்லாம் முகக்கவச வடிவமைப்புகளில் மக்கள் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கிவிடார்கள் என்றே தோன்றுகிறது. உதாரணமாக  கொரோனாவைத் தடுக்க பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கூண்டு முகக்கவசம் மூலமாக, சுற்றுச்சூழல் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் பெல்ஜியத்தை சேர்ந்த நபர் ஒருவர் .

பெல்ஜியத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தனிமனித இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என அந்நாட்டு அரசு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வாறு பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதைத் தடுக்க முகக்கவசமாக வித்தியாசமான ஒரு பொருளை வடிவமைத்துள்ளார், சமூக ஆர்வலரான ALAIN VERSCHUEREN.

பெல்ஜியம் தலைநகரான Brussels சாலைகளில் வித்தியாசமான முறையில் முகத்தை மறைத்துக்கொண்டு செல்லும் இவரை ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.

தன்னைத்தானே காத்துக் கொள்வதற்காக, கண்ணாடி கூண்டு ஒன்றை வடிவமைத்துள்ளார் இவர். PORTABLE OASIS என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசத்தில், நறுமணத் தாவரங்களை வளர்த்துள்ள அவர், இதன்மூலம் இயற்கையான காற்று தனக்கு கிடைப்பதாகத் கூறுகிறார்.

வழக்கமான முகக்கவசத்தை காட்டிலும், இந்த முகக்கவசத்தை அணிந்தால் காற்று மற்றும் ஒலி மாசுபாடு குறைவதாகக் கூறும் அவர், பொதுமக்களின் நேரடித் தொடர்பை முற்றிலும் துண்டிக்கும் வகையில் இந்த முகக்கவசத்தை வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் வழக்கமான முகக்கவசத்தை பயன்படுத்தும்போது, சில நேரங்களில் மூச்சு விட சிரமம் ஏற்படும் நிலையில், தான் தயாரித்துள்ள இந்த முகக்கவசத்தை பயன்படுத்தினால் எந்த வித சிரமமும் இல்லாமல் இயற்கையான காற்றை சுவாசிக்கலாம் எனக் கூறி அனைவரையும் சற்று யோசிக்க வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here