கோலாலம்பூர்: தினமும் 1 ஜிபி இலவச இணைய திட்டம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படும். மலேசிய கம்யூனிகேஷன்ஸ் அண்ட் மல்டிமீடியா கமிஷன் (எம்.சி.எம்.சி) ஐந்து முக்கிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான செல்காம், டிஜி, மேக்சிஸ், யு-மொபைல் மற்றும் டெலிகாம் மலேசியா (டி.எம்) ஆகிய நிறுவனங்கள் இந்த முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியது.
தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவி நாட்டின் கோவிட் -19 நிலைமை இன்னும் குறையவில்லை என்பதால் இந்த சமீபத்திய நீட்டிப்பு மக்களுக்கு கூடுதல் ஆதரவாக வழங்கப்படுகிறது.
கல்வி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தபடி ஹரி ராயாவிற்கு பிறகு வீட்டு அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு (பி.டி.பி.ஆர்) மாறக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு இது உதவும் என்று எம்.சி.எம்.சி. இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலவச 1 ஜிபி தினசரி ஒதுக்கீடு தற்போதுள்ள பிற தரவுத் திட்டங்களுக்கு கூடுதலாக உள்ளது. மேலும் இது வீடியோ கான்பரன்சிங்கிற்காகவும், எந்த நேரக் கட்டுப்பாடும் இன்றி நாள் முழுவதும் மின்னஞ்சல் வழியாக கற்பிக்கும் பொருட்களை நிர்வகிக்கவும் பயன்படுத்தலாம்.
இருப்பினும், சமூக ஊடக உலாவல், வீடியோ ஸ்ட்ரீமிங், மியூசிக் ஸ்ட்ரீமிங் மற்றும் ஆன்லைன் கேம்களுக்கு இதைப் பயன்படுத்த முடியாது.
இதற்கிடையில், ஒய்.டி.எல் கம்யூனிகேஷன்ஸ் சென்.பெர்ஹாட் கல்வி முறைக்கு தனது ஆதரவை செப்டம்பர் 30 வரை நீட்டித்து, பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களையும் உள்ளடக்கியது.
இந்த தொகுப்பு 40 ஜிபி தரவுடன் இலவச சிம் கார்டையும், பி 40 குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போனையும் வழங்குகிறது. – பெர்னாமா