முதல் நாளே ரூ.100 கோடியை நெருங்கிய ‘ஜெயிலர்’ வசூல்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, மிர்ணா நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் கலந்த டார்க் காமெடி திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் மோகன் லால், ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார், தமன்னா ஆகியோர் கேமியோ ரோலில் நடித் துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

உலகளாவிய வசூல்

ஜெயிலர் திரைப்படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. ஒரு படத்தின் வெற்றி அதன் வசூலை வைத்து தான் தீர் மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜெயிலர் திரைப்படம் வசூலிலும் பல்வேறு சாத னைகளை படைத்து மாஸ் காட்டி வருகிறது. அதன்படி இப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.95.78 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி. இதன்மூலம் இந்த ஆண்டு முதல் நாளில் அதிக வசூல் குவித்த தமிழ் படம் என்கிற சாதனையை ஜெயிலர் படைத்துள்ளது.

ஆந்திரா நிலவரம்

தமிழகத்தை பொருத்தவரை ஜெயிலர் திரைப்படம் ரூ.29.46 கோடி வசூலித்து இருக் கிறது. அதேபோல் அண்டை மாநிலமான ஆந்திராவில் இப்படம் ஒரே நாளில் ரூ.12.04 கோடி வசூலித்து உள்ளது. ஜெயிலர் படத்துக்கு கிடைத்துள்ள ஏகோபித்த வர வேற் பால், ஆந்திராவில் அப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக் கப்பட்டு வருகிறதாம்.

கர்நாடகாவில் சாதனை

கர்நாடகாவில் ஜெயிலர் திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இப்படம் கர் நாடக மாநிலத்தில் மட்டும் முதல் நாளில் ரூ. 11.92 கோடி வசூலித்து உள்ளது. இதன் மூலம் கபாலி பட சாதனையை முறியடித்துள்ளார் ரஜினி. கபாலி திரைப்படம் 10.9 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது ஜெயிலர் முறியடித்து உள்ளது.

கேரளாவில் முதலிடம்

கேரளாவில் இப்படம் ரூ. 5.38 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிக வசூல் குவித்த தமிழ் படம் என்கிற சாதனையை ஜெயிலர் படைத்துள்ளது. இதற்கு முன்னர் வாரிசு திரைப்படம் முதல்நாளில் ரூ.3.5 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை ரஜினியின் ஜெயிலர் முறியடித்து முதலிடம் பிடித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா

இதுதவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஜெயிலர் திரைப்படம் ரூ.4.23 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் ரூ.32.75 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் தரமான கம்பேக் கொடுத்து தான் ஒரு பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா என நிரூபித்து இருக்கிறார் ரஜினிகாந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here