தொழிலாளர் நலன் காக்கத் தொழில் செய்வோம்

புதிய கைப்பேசி  செயலி அறிமுகம்

புத்ராஜெயா-

நாடு தழுவிய அளவில் தொழிலாளர்களின் தேவைகள், புகார்கள் அறிந்து அவற்றுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக தொழிலாளர் நலன் காக்கும் தொழிலாளர்களுக்கான கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்படுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

இதன் வழி தேசிய அளவில் தொழிலாளர்களின் புகார்களுக்கு விரைந்து தீர்வு காண முடியும். தொழிலாளர்களின் உரிமைகள், நல்வாழ்வு, பாதுகாப்புச் சுழலையும் நம்பிக்கையையும் உறுதிசெய்யும் செயலியாக இது விளங்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் உள்ளூர், வெளியூர் தொழிலாளர்களின் புகார்களை ஒரே மையப் பகுதிக்குக் கொண்டு வந்து முதலாளிகளுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இத்திட்டம் உருவாக்கம் பெற்றுள்ளது என்று அமைச்சர்  சொன்னார்.

புத்ராஜெயா லி மெரிடியன் ஹோட்டலில் திங்கட்கிழமை ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் மனிதவள அமைச்ங்ர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கைப்பேசி  செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

நோக்கம்
– தொழிலாளர்களின் உரிமைகள், நல்வாழ்வைப் பாதுகாத்து மேம்படுத்துவதை உறுதி செய்யதல்.
– உள்ளூர், வெளியூர் தொழிலாளர்களின் புகார்களை ஒரே தளத்தில் கொண்டுவரல்.
– முதலாளிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
– இதன் வழி பணியிட சுற்றுச் சூழல் மேம்படுத்தப்படும் என அமைச்சு நம்புகிறது.

செயலியின் நன்மை
– தொழிலாளர்கள் தொடர்பான புகார்களை உடனுக்குடன் அளிக்க முடியும்.
– தொழிலாளர் நலன் காக்கப் பரிந்துரைகள், ஆலோசனைகள் வழங்க முடியும்.
– 8 வகையான தொழிலாளர் தொடர்பான சிக்கல்களைக் கைப்பற்றும் திறன் கொண்டது.
– இங்கே வழங்கப்படும் தகவல்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும்.
– 3லிருந்து 7 நாட்களுக்குள், புகார்கள் தொடர்பான நடவடிக்கைகள் தெரியப்படுத்தப்படும்.
– முந்தைய புகார்களின் விவரம், நடவடிக்கை, மதிப்பீடு அனைத்தையும் உள்ளடக்கி இருக்கும்.
– நினைவூட்டல் அறிவிப்பு, மின்னஞ்சல் அறிவிப்பும் உண்டு.
இந்தச் செயலியில் வரும் புகார்கள் 80 தொழிலாளர் அலுவலகங்களால் கையாளப்படும்.
தீர்க்கப்படாத புகார்கள் உடனடியாக, துணையமைச்சரையும் என்னையும் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வரப்படும்.
தொழிலாளர் நலனில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரவல்ல இந்த செயலியைப் பற்றி வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளும் அவரவர் நாட்டுத் தொழிலாளர்களுக்குச் சொல்ல வேண்டும்.
மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (மதொங்கா) மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பும் அவர்களின் உறுப்பினர்களிடம் இந்தத் தகவலைக் கொண்டு சேர்க்க வேண்டும்.
அடுத்த கட்டமாக விரைவில் மின்னியல் சம்பள முறை இதன்வழி அறிமுகப்படுத்தப்படும். சம்பளம் வழங்கப்படுவது கண்காணிக்கப்படும்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதற்கான இயங்கலைத் திட்டம்.
தேசிய மனிதவள முயற்சியின் 6 முக்கிய கூறுகள் :
– திறன் மேம்பாடு
– வேலை வாய்ப்புச் சேவைகள்
– தொழிலாளி நலன்
– தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்
– சமூகப் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி
பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் :-
– வேலைவாய்ப்புச் சட்டம் 1955
– ஊழியர் வீட்டுவசதி, தங்குமிடம் சட்டதிருத்தம் 2019
– தேசிய ஊதிய ஆலோசனைக் குழுச்சட்டம் 2011,
– தொழில்துறை உறவுகள் சட்டம் 1967
என்று அமைச்சின் மக்கள் குறிப்பாக தொழிலாளர் நலன் காக்கும் அம்சங்களை டத்தோஸ்ரீ சரவணன் பட்டியலிட்டார்.

-எம். அன்பா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here