அமர்ந்து உண்ண அனுமதி இல்லையா?

பிழப்பை இழக்கும் உணவகங்கள்!

கோலாலம்பூர்-

எம்சிஓ விதிக்கப்பட்ட பகுதிகளில் மற்ற பொருளாதாரத் துறைகள் வழக்கம் போல் இயங்க அனுமதிக்கப்பட்ட வேளையில், உணவகங்களில் மட்டும் வாடிக்கையாளர்கள் அங்கே அமர்ந்து உணவருந்த முடியாதது ஏன்? என்று உணவக உரிமையாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

ஆகவே, உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்க வேண்டும் எனக்கோரி உணவக உரிமையாளர்களும் நிர்வாகிகளும் அரசாங்கத்திற்கு கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளனர்.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின், தற்காப்பு மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இருவருக்கும் சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லாவுக்கும் அவர்கள் திறந்த கடிதம் அனுப்பியுள்ளனர்.

எஸ்ஓபி விதிமுறைகள் உறுதியான முறையில் கடைப்பிடிக்கும் பட்சத்தில் உணவகங்களுக்குள் அமர்ந்து உணவருந்தும் வாடிக்கையாளர்களால் தொற்று பரவும் ஆபத்து இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆகவே, உணவகங்களுக்குள் அமர்ந்து உணவருந்த அனுமதி இல்லை என்பது ஏற்புடையதாக இல்லை என்கிறார் சின் என்ற உணவக உரிமையாளர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here