2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வு

நியூயார்க்:

2023-ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் இதழின் சிறந்த வீரராக அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்தாண்டு உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான் ஸைத் தோற்கடித்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா அக்கிண்ணத்தைப் பெறுவதற்கு மெஸ்ஸி முக்கிய பங்கு வகித்தார்.

36 வயதான அவர் இவ்வாண்டின் தொடக்கத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பை விட்டு வெளியேறினாலும், மெஸ்சியை இன்டர் மியாமி, அல்-ஹிலால் ஆகிய கால்பந்து கிளப்புகள் வாங்க முனைப்பு காட்டின.

பல வாய்ப்புகளுக்கு மத்தியில் மெஸ்சி இன்டர் மியாமி கால்பந்து அணியில் இணை யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.மெஸ்சி இன்டர் மியாமி அணியில் இணைந்த பிறகு இன்டர் மியாமி விளையாடும் போட்டிகளைக் காண்பதற்கான நுழைவு சீட்டு களின் விலை உயர்ந்தது.

கால்பந்து உலகில் சாத்தியமற்றதாகத் தோன்றிய அமெரிக்காவை ஒரு கால்பந்து நாடாக மெஸ்சி மாற்றியுள்ளார் என்று டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here