ராணுவ வீரர்களைத் தாக்கிய முன்னாள் சிப்பாய் சுடப்பட்டார்

-மனநலம் பாதிக்கப்பட்டவரா?

ஈப்போ, 
ஈப்போவில் இருந்து சீமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீக்கில் இருக்கும் 4ஆவது பட்டாளத்தின் எல்லைப் பாதுகாப்புச் சாவடியைத் தாக்கிய முன்னாள் சிப்பாய் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலை 6.45 மணி அளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று பேராக் போலீஸ் தலைவர் மியோர் பரிடா லாத்ராஸ் வஹிட் தெரிவித்தார்.

பாராங்கத்தி வைத்திருந்த 35 வயதுடைய அந்த நபர் வேலி மீது ஏறி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்திருக்கின்றார். உள்ளே நுழைய வேண்டாம் என்று சிப்பாய்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்  பாராங்கத்தியால்  தாக்கி இருக்கின்றார்.

அப்போது சிப்பாய்கள் அவரை சுட்டிருக்கின்றனர். போலீசாரால் அந்த நபர் கிரீக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த நபர் 2003ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். ஆனால் அவருக்கு மனநலப் பிரச்சினை இருந்ததால் 2013ஆம் ஆண்டில் அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நபர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது பற்றி புலன் விசாரணை நடத்தப்படுகிறது. அவரிடமிருந்த சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here