500 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்கப்படவில்லை

பாதுகாவலர்

திரும்பிச்செல்லுங்கள் -உத்தரவு

பாசீர் மாஸ்-
மாநிலம் கடந்த பயணத்திற்கு அனுமதிக் கடிதம் வைத்திருக்காத காரணத்தினால் கிளாந்தான் மாநிலத்திற்குள் நேற்று முன்தினம் நுழைய முயன்ற 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக கிளந்தான் போலீஸ் தலைவர் ஷபியான் மாமாட் கூறினார்.

குவா மூசாங், பாசீர் பூத்தே, ஜெலி ஆகிய பகுதிகளில் வாயிலாக இந்த வாகனங்கள் கிளாந்தானுக்குள் நுழைய முயன்றன.

இந்த வாகனங்களைச் செலுத்தியவர்கள் மாநிலம் கடந்த பயணத்திற்குரிய அனுமதிக் கடிதம் வைத்திருக்கவில்லை.

ஆனால், அதே சமயம் சிலர் எந்த போலீஸ் நிலையத்திலும் உறுதி செய்யப்படாத மாநிலம் கடந்த கடிதத்தை மட்டுமே வைத்திருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here