தோல்விகண்ட அரசாங்கமாம் ! – ஆர்ப்பாட்டம்

  • எதிர்ப்பாளர்கள் 20 பேர் கைது  கைது!

பத்து பகாட், பாரிட் ராஜாவில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதன் தொடர்பில் 20 சந்தேக நபர்களைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

அந்தப் பகுதியில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டதோடு அரசாங்கத்திற்கு எதிராகப் பதாகைகளைத் தொங்கவிட்டிருந்தனர். இந்தச் சம்பவம் பற்றிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தோல்விகண்ட அரசாங்கம் என்று கூறிக்கொண்டு சிலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கைதானவர்கள் 16 முதல் 28 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் எனவும் பத்து பகாட் போலீஸ் தலைவர் ஏசிபி இஸ்மாயில் டோலா தெரிவித்துள்ளார்.

கைதான 20 பேரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இவர்கள் மே 17ஆம் தேதி வரை 4 நாட்கள் காவலில் வைக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தபின் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் இவர்கள் அனைவரும் பிடிபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நேற்று இரு தினங்களுக்குமுன் பெக்கான், பாரிட் ராஜா, 22.5ஆவது கிலோ மீட்டர், ஜாலான் பத்து பகாட், குளுவாங்கில் நடந்தது தெரியவருகிறது.

அந்தச் சாலையைப் பயன்படுத்திய வாகனமோட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும்  வகையில் சுமார் 40 பேர் மோட்டார் சைகை்கிள்களையும் கார்களையும் சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்திருந்தனர். சுமார் 15 நிமிடம்  இந்நடவடிக்கை  நீடித்தது.

தோல்விகண்ட அரசாங்கம் என எழுதப்பட்டிருந்த பதாகையையும் அவர்கள் வைத்திருந்தனர். அதுமட்டுமன்றி பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கோங் நான் சீனப் பள்ளிக்கு எதிரே மேம்பாலத்தில் இதே போன்ற ஒரு பதாகை தொங்கவிடப்பட்டிருந்ததையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here