பாலஸ்தீன மக்கள் துயருக்கு மனிதாபிமான உதவிகள்
போரினால் பாலஸ்தீன மக்கள் பல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். அந்நாட்டில் வாழும் பல இன மக்களுக்கு உதவும் பொருட்டு பாலஸ்தீன மனிதநேய நிதியுதவித் திட்டத்தைத் தொடங்கியதாக பேராக் மந்திரி பெசார் டத்தோ சாரனி முகமட் ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்திற்கு பின் இவ்வாறு அறிவிப்பு செய்தார்.இதன் தொடர்பாக பேராக் மாநில அரசு 100,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து இம்மாநிலத்தின் அரசாங்க இலாகாவினர், ஜி எல் சி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து நிதியுதவி வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதிகள் நேரடியாக பாலஸ்தீன மக்களை சென்றடைய, பாரிட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நிஜார் ஸக்கரியா வாயிலாக அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்தாகி விட்டது. அதுமட்டுமன்றி, மலேசிய வெளியுறவு அமைச்சின் வாயிலாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்றடைய ஏற்பாடுகள் செய்துள்ளன என்று அவர் சொன்னார்.
ஆர்.கிருஷ்ணன்