சாலைப்பாதுகாப்பு நடவடிக்கை: பினாங்கில் 46 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்-715 சம்மன்கள்

புக்கிட் மெர்தாஜாம்:

நேற்று செபெராங் பிறை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பினாங் சாலை போக்குவரத்துத் துறை மேற்கொண்ட சாலைப்பாதுகாப்பு நடவடிக்கையில் மொத்தம் 46 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றப்பட்டது.

‘‘Ops Khas Motosikal’’ என்ற குறியீட்டுப் பெயருடன் நடத்தப்பட்ட இந்த நடவடைக்கையில் 715 சம்மன்களும் வழங்கப்பட்டது.

இதில் காலாவதியான உரிமம், காலாவதியான சாலை வரி, காப்பீடு இல்லாதது, விவரக்குறிப்புகள் மற்றும் P ஸ்டிக்கர்களைக் காண்பிக்க தவறியவர்களுக்கு சம்மன்களும் வழங்கப்பட்டது என்று பினாங்கு ஜே.பி.ஜே நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை “மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் சட்டம் மற்றும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி ஓட்டுவதால் விபத்துக்களை தவிர்க்க முடியும் ” என்று JPJ இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here