மரணங்கள் போலி அல்ல! ….. இத்தோடு போதும்!

  போலீஸ்துறை மீது –நம்பிக்கை குறைகிறதே நண்பா!

போலீஸ்துறை என்றாலே மக்கள் காவலன் என்ற பெயர் மக்களிடத்தில் இருந்தது. அது எப்போது என்று அனைவருக்கும் தெரியும் . இப்போது போலீஸ் என்றாலே மக்களுக்கு அச்சம் கோத்தா கினபாலு உயரத்திற்குத்  தலை தூக்கி நிற்கிறது. 

குறிப்பாக இந்தியர்களுக்கு இந்த அச்சம் கொரோனா  போலவே அச்சமாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதரங்கள் அவசியமில்லை. 

ஓர் இந்தியர், அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் கைது செய்யப்படுவாராயின் உயி நிச்சயம் இல்லை. அவரை லாக்கப்பில் வைத்த ஒரு சில நாட்களிலேயே மரணத்தை எட்டிவிடுகின்றனர். இது தொடரந்து பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதால் இந்தியர்களுக்கு  போலீசார் மீது நம்பிக்கையற்ற பார்வையே விழுந்திருக்கிறது.

இந்தியர்கள் மட்டும் குறி வைக்கப்படுகின்றார்களா என்றும் ஐயம் கொள்ள வைக்கிறது.

குறிப்பாக, மக்களைக் காக்கின்ற போலீஸ்துறை லாக்கப்பில் இந்தியர்கள் கூடுதலாக மரணமடையும் விவகாரத்தில்  அலட்சியம் காட்டுவதாகவே  உணரப்படுகிறது.  கைது செய்யப்பட்டபின் பலமான தாக்குதலுக்கு ஆளாவதால் மரணம் சம்பவிப்பாதாக  ஒட்டு மொத்த குரல்களும் கூறுகின்றன. மருத்துவக்குறிப்புகளில் தாக்கப்பட்டதால் என்றும் கூறுகின்றன.

லாக்கப்பில் இருக்கின்றவர்களை வெளியாட்கள் வந்து தாக்குவார்களா? 

கைது செய்யப்பட்டவர் குற்றவாளிகளாக இருந்தால் நியாயமான தண்டனை கிடைப்பதற்கு நீதித்துறை இருக்கிறது.  கைது செய்யப்படுவர் மீதான குற்றத்தை நிரூபித்து அவர்களுக்கான தண்டனையை உறுதி செய்யலாம். அப்படிச் செய்யாமல்  அடித்து நொறுக்கி, அதனால் ஏற்படும் விபரீதங்களால் மரணத்தை தழுவுகிற கலாச்சாராம் போலீஸ் லாக்கப்பில் உருவாக எந்தச்சட்டம் வகை செய்கிறது என்ற கேள்விகளுக்கு நீதித்துறையிலிருந்து சரியான பதில்கள்  இல்லை.

ஒருவர் கைது செய்யப்பட்டபின் அடுத்தது அவர்கள் மருத்துவ ரீதியா பரிசோதைக்கப்படவேண்டும். நோய்கள் இருப்பின் அவர்களின் தொடர் மருந்து வகைகளைக் கண்டறிந்து வழங்கும் முறை ஏன் அமல்படுத்தப்படவில்லைகவசியமானால் மருத்துமனையிலும் சேர்க்கப்பட வேண்டும். ஆபத்தான நிலையில், இறுத்திக்கட்டத்தில சேர்ப்பதல்ல . இறுதிக்கட்டத்தில் எந்த வைத்தயமும் செல்லாதே!

தாமதப்டுத்தி மருத்துமனை கொண்டு செல்வதாகவும்  பேச்சு வாக்கில் இருக்கிறது

எத்ற்கெடுத்தாலும் நோயால் இறந்தார் என்று கைவிரித்துவிடுவது சரியான காரணமாக இல்லை. இல்லவே இல்லை. அதிகாரத் துஷ் பிரயோகத்தினால் ஏற்படும் மரணங்களை  நிறுத்தப்படாவிட்டால்   ஓர் இனத்தவர் மட்டுமே பழிவாங்கப்படும் எண்ணம் இயல்பாகவே உருவாகிவிடும் என்பதல்ல, உருவாகிவிட்டது போலவே அண்மைய மரணங்கள் உணர்த்துகின்றன.

அண்மையில் , ஓர் ஆய்வில் மகழ்ச்சியாக வாழத் தகுந்த நாடுகளில் மலேசியா நான்காம் இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் லாக்கப்பில் இந்தியர்களின் மரணங்கள் ஏன் நிகழ்கின்றன. இந்தியர்கள் மட்டும் வாழத்தகுதியில்லையா? இதை ஆய்வுகள் உணரவில்லையா?

இந்நாட்டில் இந்தியர்கள்  ஓர் அங்கம் இல்லையா? இந்தியர்கள் நாட்டிற்காக வாழவில்லையா? உழைக்கவில்லையா? ஒத்து

ப் போகவில்லையா? முன்னேற்றத்திற்குன் உறுதுணையாக இல்லையா?

மண்ணின் மீது மங்காத விசுவாசம் என்பதற்கு இந்தியர்களைத்தவிர வேறு எவரை உதாரணம் காட்ட முடியும்! 

கடாரம் என்று பெயர் வைத்துவிட்டுப் போனவனுக்கு நாட்டைப் பிடிக்கும் ஆசை எழுந்தேயில்லை என்பதை வரலாறு கூறுகிறது. விருதினராய் பயணம் வந்துபோன தடயம் மட்டுமே கடாரத்தில்  இருக்கிறது என்றால் தமிழனின் உயர்ந்த பண்பு தெரிகிறதல்லவா?

இந்தியர்கள் மண்ணின் விசுவாசிகள். அவர்களும் மக்களே! இதில் வேல் பாய்ச்சும் எண்ணம் எந்த வகையில் நியாயம்?

காவல் கைதிகள் மரணம் தொடர்கதை என்றால் இதற்குக் காரணமானவர்கள் மன்னிக்கப்படுகிறார்களா? அல்லது மறைக்கப்படுகிறார்களா? போலீஸ் தரப்பு காரணங்கள் பல முரண்பாடுகளைக்  காட்டுகின்றன என்பது செய்தி. இது வெளிப்படையான  உண்மை.  இதன் தொடர்பில் முழுமையான விசாரணை தேவை என்று பல தரப்பினர் குரல் கொடுப்பதும் காதில்  விழவில்லையா? அப்படியென்றால் …….ஊஹூம் , அதுவேதான்.!  

-கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here