சிலாங்கூரில் வீடு வீடாக சென்று கோவிட்-19 ஸ்கிரீனிங் செய்ய திட்டம்

ஷா ஆலம்: கோவிட் -19 ஸ்கிரீனிங் சோதனையை வீடு வீடாக நடத்த சிலாங்கூர் அரசு பரிசீலிக்கும் என்று மந்திரி  பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷரி தெரிவித்தார். இது தன்னார்வலர்கள் உட்பட மனிதவள கிடைப்பதைப் பொறுத்தது என்றும் அவர் கூறினார்.

வீடு வீடாக ஸ்கிரீனிங் சோதனை செய்ய பெரிய குழு தேவைப்படும் என்று அவர் திங்கள்கிழமை (மே 24) பாலஸ்தீனியர்களுக்கான Selangor Prihatin  மனிதாபிமான நிதி திட்டத்தை ஆரம்பித்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சிலாங்கூர்  மனிதாபிமான நிதியத்தில், பாலஸ்தீனிய மக்களுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்த மாநில அரசின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என்றார்.

இது RM1mil ஐ சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த சேகரிப்பு மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) வாங்க பயன்படும். மேலும் RM223,957.77 நிதி இன்று திரட்டப்பட்டது என்றும் அவர் கூறினார். – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here