பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவிற்கு கொரோனா கட்டுப்பாட்டை மீறியதற்காக அபராதம்

பிரேசில்: பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவிற்கு கொரோனா கட்டுப்பாட்டை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள மாரன்ஹாவோ மாகாணத்தில் ஒரே இடத்தில் 100 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதே வேளை, முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 21 ஆம் தேதியன்று, மாரன்ஹாவோவில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ முகக்கவசம் அணியாது இருந்தார். மேலும் மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், முகக்கவசம் அணியாது கூட்டத்தில் பங்கேற்றதற்காக பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக மாரன்ஹாவோ ஆளுநர் ஃப்ளாவி டினோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here