புத்ராஜெயா: சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ராஜினாமா செய்ததாகக் கூறும் வலைப்பதிவு ஒரு போலிச் செய்தி என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரு ட்விட்டர் பதிவில், டாக்டர் நூர் ஹிஷாம் தனது பதவியில் இருந்து விலகியதாகக் கூறும் கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டை அமைச்சகம் பகிர்ந்து கொண்டதுடன் இது “போலி செய்தி என்றும் இதனை பரப்பவோ பகிர்ந்து கொள்ளவோ வேண்டாம் ”என்று அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 28) இன்று அதிகார பூர்வ கணக்கிலிருந்து ட்வீட் செய்தது.
இதுபோன்ற குற்றச்சாட்டு சுகாதார இயக்குநர் ஜெனரல் பற்றி வருவது இது முதல் முறை அல்ல என்றும் குறிப்பிட்டது.