அமேசான் நிறுவனரின் முக்கிய அறிவிப்பு!

27 ஆண்டுகளுக்கு பின்  தலைகீழாய் மாற்றிய லாக்டவுன்!!

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஜூலை 5ஆம் தேதி விலகுவதாக அந்த நிறுவனத்தை கட்டமைத்த ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனம் 1994ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்டது. ஒரு புத்தகk கடையாக அமேசானை அவர் தொடங்கினார். ஆனால் தற்போது அவரது சொத்து மதிப்பு 16,700 கோடி டாலர். அதாவது இந்தியா ரூபாய் மதிப்பில் 13 லட்சம் கோடி.

இவர் பதவி விலக இருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது அந்த தேதி ஜூலை 5 என்பதை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றிவரும் ஆன்டி ஜாஸே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜூலை 5ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

புதிதாகப் பொறுப்பு ஏற்கப் போகும் ஆன்டி ஜேஸே, தற்போது அமேசானின் இணையவழிச் சேவைகளுக்கு பொறுப்பாக இருந்து வருகிறார்.

எனக்கு மிகவும் உகந்த தேதியை, என் நெருக்கமான தேதியை தேர்வு செய்துள்ளேன் என்று ஜெஃப் பெசோஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here