செலாயாங் சந்தைக் கடைகளுக்கு வருட இறுதிவரை வாடகை இல்லை; கூட்டரசுப் பிரதேச அமைச்சு அறிவிப்பு

கோலாலம்பூர்: செலாயாங் தினசரி சந்தையில் உள்ள வர்த்தகர்களின் சுமையை குறைப்பதற்காக இந்த ஆண்டு இறுதி வரை கடைகளுக்கான வடகையை செலுத்த வேண்டியதில்லை என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்வார் மூசா தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை முதல், சந்தையின் புதியக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கும் வர்த்தகர்களுக்கும் இந்தத் தளர்வு வழங்கப்படும்.

வாடகை வீதத்தைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமென அவருக்கு விணனப்பம் வந்ததாகவும் அதனை தொடர்ந்து அதை இலவசமாகவே வழங்க முடிவு செய்ததாகவும் , இந்த ஆண்டு இறுதி வரை வாடகை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் இது வர்த்தகர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்…  என்றும் அவர் இன்று அவரது டுவிட்டர் இடுகையின் வழியாகத் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் செவ்வாயன்று, புதியக் கட்டிடத்தில் செலாயாங் தினசரி சந்தை முழுமையாகச் செயல்படும், அதே நேரத்தில் இப்பகுதியில் இயங்கும் தற்காலிகச் சந்தை நடவடிக்கைகள் திங்கள்கிழமை நிறுத்தப்படும்.

இதற்கிடையில் தற்போதுள்ள தடுப்பூசி விநியோக மையத்திற்கு (பிபிவி) மாற்றாக அறிவிக்கப்பட்ட, மைமெடிக்@விலாயா மொபைல் தடுப்பூசி டிரக் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என்றும் அன்வார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here