இனி இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாதாம்

வடகொரியா உலகளவில் பேசப்பட்டு நாடாக இருக்கிறது. இந்தநாட்டில் எப்போதுமே கடுமையான சட்ட திட்டங்கள் இயற்றப்படுவது வழக்கம். அதிலும் அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் செயல்பாடுகளை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தற்போது கோவிட்  தொற்று பரவல் காரணமாக, இந்த நாடே திரைமறைவு வாழ்க்கையை நடத்திவருகிறது. இந்த நாட்டில் எத்தனை பேர் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டனர் என்றுகூட தெரியவில்லை. எங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை. ஒருத்தர்கூட பாதிப்படையவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் வட கொரியா கூறி வருகிறத.

தொற்று பரவும்போதே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டது இந்த நாடு. 2 வருடமாக எத்தனையோ பேர் இந்த நாட்டுக்கு பயணம் செய்து வந்த நிலையில், ஒருத்தரும் தொற்றில் பாதிக்கவில்லை என்று தொடர்ந்து கிம் சொல்லி ஷாக் தந்து வருகிறார்.

எனவே, உலக நாடுகள் தங்கள் நாடுகளில் தொற்றை கட்டுப்படுத்த படாதபாடு பட்டு வரும் நிலையில், கிம், வழக்கம்போல புது உத்தரவு ஒன்றை தன் நாட்டில் பிறப்பித்துள்ளார்.

இறுக்கமான ஜீன்ஸ் பேண்டுகளை தன்னுடைய மக்கள் அணிய கூடாது என்று சொல்லி உள்ளார். பிராண்ட்டட் டீ சர்ட்டுகள் (பனியன்கள்) வாசகங்கள் அடங்கிய டீ சர்ட்டுகள் இதுபோன்றவற்றையும் அணிய கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். டிரஸ் மட்டுமில்லாமல் ஹேர் ஸ்டைலிலும் கை வைத்துவிட்டார் கிம். 15 வகையான சிகை அலங்காரத்திற்கு மட்டுமே அனுமதியளித்துள்ளார்.

நீளமாக முடிவைத்துக்கொள்வது, ஸ்பைக் வைத்துக் கொள்வது இப்படி எதற்குமே அனுமதி கிடையாது. மூக்கு குத்திக்கொள்வதுக்கும் கிம் ஜாங் தடை விதித்துள்ளார். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், முதலாளித்துவத்திற்கு எதிராகவும், ஃபேஷன் ட்ரெண்டுகளை வளரவிடக்கூடாது என்பதற்காகவும் இப்படி தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

அதுமட்டுமல்ல, எதையெல்லாம் தடை சொல்லி அறிவித்துள்ளாரே, அவைகளை கண்காணிக்க ஒரு டீமை உள்ளே இறக்கி விட்டுள்ளாராம் கிம்..!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here